புதன், 24 மார்ச், 2010

நினைவோ ஒரு பறவை



தொலை தூரத் தேசமொன்றில்
நீயிருந்த போது..
தொலைத்திருந்தேன் தனிமையில்
நானும் இன்பமான நாட்களை..

அருகில் இருந்து ஆரத் தழுவி..
இமை வருடி
இமைக்காமல் நீ பார்த்திருக்கும்
அழகையெல்லாம் நினைத்தபடி..

இரவிரவாக கடிதம் எழுதி..
இல்லை இல்லை அது கடிதம் என்று நீ
ஒரு போதும் சொன்னதுமில்லை..
என் உணர்வின் வலிகளை விழிகள் சுமந்தபடி..

மழை நீர் வந்து அழியும் கோலமாய்..
ஒவ்வொரு காகிதத்தின் எழுத்துக்களை
கண்ணீரால் நனைத்து..
உன் கரம் வந்தடையும் எனது காதல் கடிதங்கள்..

பதிலுக்கு பாடல் வரிகளோடு முத்தங்கள் சுமந்து வரும் உன்
மடலை கண்ணீரோடு பலதடவை வாசித்து..
கடலில் அழும் மீனாக யாருக்குமே தெரியாமல்..
என் மடல் வீங்க உறங்கிடுவேன் நெஞ்சோடு அணைத்தபடி..


பத்திரமாய் அத்தனையும் நீ எடுத்து வந்து..
என் முன்னிலையில் வாசித்த போது..
மார்கழியில் பழுத்து வெடித்துச் சிதறிய மாதுளை முத்துக்கள் போல்..
வெட்கத்தால் அகம் மலர முகம் பொத்தி சிவந்திருந்தேன்..


பதிலுக்கு நானும் ஒரு மூட்டையாக சேர்த்து வைத்திருந்த
உன் அன்புக் காதல் கடிதங்களை உனக்கு முன்னால் வாசிக்க
அதை நீ எட்டி எட்டிப் பறிக்க வர..


நான் கடிதத்தையும் கொண்டு ஓடிப்போக..
சிரித்துச் சிரித்து மகிழ்ந்த அந்தப் பொன்னான நினைவுகள் போல்..
இனிக்கவில்லை மின்னஞ்சலில் வரும் உன் கடிதங்கள்.

--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

உன் நினைவு


உன் நினைவில்
விலகாத நினைவாய் நான்.
உன் இதயம் என்றால்..

அது பொய்தானே..

உன் இதயம் விட்டு விட்டு
துடிக்கிறதே..
எவ்வாறு விடாமல் விலகாமல்..
என் நினைவு..?
--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

நீளமான நேரங்கள்..



நீயூம் நானும் ஒன்றாகயிருந்தபோது...
பகல் பொழுது கூட
கண்ணிமைக்கும் தூரத்தில்..
கண் சிமிட்டிக்கொண்டிருந்தது...

இது இன்னும் நீளாதா என
ஏங்கும் ஒவ்வாரு பொழுதிலும்..
இருளும் வந்து
இரு புருவங்களின் இடைவெளியாய்..
இருந்து விட்டுச் சென்றது...

நீளும் பொழுதுக்காக..
நீயூம் நீங்காதிருக்க வேண்டி
நீண்ட தவம் புரிந்து
வரம் ஒன்று நான் வாங்கி வர..

கூடு விட்டுப் போன ஆவியாய்...
என்னை விட்டு சென்றாய் நீயூம் பாவியாய்..
--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

புதன், 24 பிப்ரவரி, 2010

எங்கே முறையிடுவது..?




எங்கே நான் முறையிடுவது..?
அங்கே என்னை அழைத்துச்செல்லுங்கள்..
இங்கே நடக்கும் கொடுமைகளை
எங்கே நான் சென்று முறையிடுவது..?

சுடும் மணலில் அழும் குழந்தை
படும் வேதனையைப் பார்த்தும் பார்க்காதுமாய்..
குடம் நிறையப் பாலுடன்..
அன்புடன் அமுது படைக்கின்றனராம் ஆண்டவனுக்கு..

நூலில் கற்றது கல்வியறிவு..
தாய் கொடுத்தது மானிட உயிர் விருது..
சேய் செய்யும் கடமைதனை மறந்து..
பொய்யாக ஒரு குற்றம் சுமத்தி..
தாய்,தந்தையர் போகின்றார் தனியிடமாம் முதியோர் இல்லமதுவாம்..

எங்கே போய் நான் முறையிடுவேன்..?

ஊருக்கு ஒரு ஆலயம் இருந்தால்
உனக்கென்ன லாபம்
தனக்குள்ளே ஒரு கேள்வியைக் கேட்டு..
வீதிக்கொரு ஆலயமாக
அவனவன் தேடுகிறான்..லாபம்..


பிழைக்கத் தெரிந்த புத்தி ஜீவிகளுக்கு...
புரியும் படி பாடம் புகட்ட...
எங்கே நான் போய் முறையிடுவேன்..?

பசிக்கு சோறு வேண்டாம்..
படிப்பிற்கு வழிகாட்டென்று..
பாதையோரத்தில் கையை ஏந்தும்..
சிறுவர்களுக்காக ஆலயம் வேண்டாம்..

அறிவை வளர்க்க ஆசானுடன் பாடம் நடத்திட
அமைதியான பாடசாலை ஒன்றை அமைத்திட..
திடம் கொண்ட நல்லவுள்ளங்கள்..
இருக்கும் இடம் கண்டு..
உடன் கூட்டி வர எங்கே நான் போய்முறையிடுவேன்.

நன்மை என தீமை விதைக்கின்றான்..
உண்மையென பொய்யை உரைக்கின்றான்..
வெள்ளை உடையில்..அழுக்கு மனதோடு..
சொல்லில் தேனை வைக்கின்றான்...
உள்ளத்தில் வேம்பாய் கசக்கின்றான்.

எங்கே நான் போய் முறையிடுவேன்...?

--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

வெள்ளி, 22 ஜனவரி, 2010

கண்களால் கைது செய்தாள்..


எப்படித் தெரியும் உனக்கு..
உன் இதயத்தை
திருடியவன் நானென்று..

உன்னைப் பார்க்கையில்..
என்னைக் கைது செய்து விட்டாயே..
கண்களால் கைது செய்துவிட்டாயே..

வியாழன், 31 டிசம்பர், 2009

ஆண்டு 2010 வருக!! தருக!!




எண்ணற்ற துயரமதில்
எம்மவர் உட்பட
எண்ணிலடங்கா மானிடர்கள்..
ஏன் பிறந்தோம் என வேதனைப்பட..

பட்டதெல்லாம் போதும்..போதும்..என
பகலவன் ஒளி போலே
அவனவன் வாழ்வும்..
அமைய வேண்டி
ஆண்டே இரண்டாயிரத்துப்பத்தே வணங்குகின்றேன்..


இன்றைய இளைஞர்களின்
இரும்புக்கரங்களில்
நன்றே செயலாற்றும் வல்லமை
கிடைத்திட இறைவனருள் துணைபுரியவேண்டும்..

வென்றே தீருவோம் என
நன்றே செயல்படும்
நானிலங்களிலும் நல்லவுள்ளங்களின்..
நன்மையில் கண்ணே கருத்தாகயிருக்க..
ஆண்டே இரண்டாயிரத்துப் பத்தே வருக! தருக!!

அக்கினிப் பிழம்புகள்
அகிலத்தை அழிக்காதிருக்க..
அணு ஆயுதங்கள் அவதரிக்கலாகாதவாறு..
அமைதி பேண வேண்டும்..

இனம், மொழி, நாடு வேறாயினும்..
இயன்வரை அன்பு ஒன்றால்..
இவ்வையகமே இன்புற்றிருக்க..
இரண்டாயிரத்துப் பத்தே நலமுடன் வருக! வருக!!




திங்கள், 28 டிசம்பர், 2009

சில நிமிடங்களுக்கு முன்


காற்றில் கலகல வென்று சிரிக்கும்..
பசுமை நிறைந்த மரத்தின் இலைகள்..
பட பட வென்று இறகையடித்து..
தம் குஞ்சுகளுக்கு உணவு ஊட்டும்
பட்சிகள்..

அமைதியாகயிருந்து
பசுமை நினைவுகளை
பேசிக்கொள்ளும் தம்பதிகள்..

வெய்யிலில் நடந்து வந்த களைப்பில்..
தன்னை மறந்து இளைப்பாறும்
வயதான வியாபாரி..

இத்தனையும் அந்த மரம்..
வெட்டப்படும் முன்..

திங்கள், 21 டிசம்பர், 2009

யாரோ அவர் யாரோ..



ஆண்டு பத்து முடித்தபிறகு..
எனை ஆளப்போகும்
மன்னன்தான் யாரோ என்றறிய..

ஆலய வாசலிலே
அமர்ந்திருந்த
கிளி ஜோசியரை நாடினேன்..

ஒன்றன்பின் ஒவ்வொன்றாக
எடுத்துப்போட்டுக்கொண்டேயிருந்த கிளியிடம்..
சீக்கிரம் எடேன் கிளி என்றேன்..

ஆஹா....கூறியது புரிந்துவிட்டதோ என்னவோ...
என்னதான் அதில் என்று என் மனம் ஆவலாகயிருக்க...
வந்த படம் குதிரையில் ஓர் அரசன்..

மங்கையிவள் மனதாள..
மன்னன் அவன் வருவான் மணமுடிக்க..
சீர் கொண்டு வருவான் சிங்காரத்தேரிலவன்..

அடடா அன்றிரவு முழுக்க எனக்கேது நித்திரை..?
சித்திரையில் வருவானோ..
சிங்காரவேலனாக வருவானோ..

எப்பொழுது வருவான்..
எப்படி வருவான்..? எத்திசையிலிருந்து வருவான்..
எண்ணி எண்ணியே விடிந்தது பொழுது..

சாஸ்திரம் பார்க்கலையோ கை சாஸ்திரம்..
யாரோ ஒரு அக்கா
கையில் ஒரு புல்லாங்குழலோடு உரத்த குரலில் சொல்ல..

ஆஹா...கிளி சொன்னது சரியா எனக் கேட்டுப்பார்ப்போம்..
கல்வி என்றா, செல்வம் என்றா, ஆயுள் என்றா அப்புறம் என்றா..
அட அதை எல்லாம் விட்டிட்டு என்னை கட்டிக்க யாரு வருவான் அத சொல் என்றேன்..

வடக்கிலிருந்து வருவான்..
வக்கீலாக வருவான்..
வள்ளலாகயிருப்பான், வல்லவனாகவும் இருப்பான் என்றா..

அப்போ கிளி சொன்னது.....???

அன்றிரவும் கெட்டது தூக்கம்..

அம்மாவிடம் பத்திரமாகயிருக்கும்
எனது குறிப்பைக் கேட்டேன்..
எதுக்கோ...? கேள்வியோடு ஒரு பார்வை..

படிச்சு என்னவாகப் போறேன் என்று..
இந்த கொப்பியில இருக்காமே நண்பி சொன்னாள்..
சரி இந்தா கவனமாகத் திருப்பி தா..

ஆஹா....அவ்வளவு நம்பிக்கை என்மீது..
மணவறையில் மாலையிட வரும் மன்னன்தான் யாரோ..?
ஒரு வரிவிடாமல் பக்குவமாய் தேடியது கண்கள்..

பெற்றோர் பார்க்கும் வரன் அமையும்..
உறவினர்களுக்குள் பொருத்தம் உண்டாம்..
திருமண வயது தள்ளிப்போகும்...


ஆஹா....இவர் எழுதியது தான் உண்மையானதோ..
பேர் பெற்றவராச்சே தவறாகக் கணிக்க மாட்டார்..
கனவுகளோடு மிதந்த காலம்..

திடீரென ஆஜரானார்...
கண்களால் மோதிக்கொண்டார்..
அப்பொழுது குடியேறிவிட்டார் இதயத்தில்..

கிளி சொன்னதும்..பொய்.
குறத்தி சொன்னதும்..பொய்..
கிரகங்களைக் கணிச்சு முற்கூட்டியே எழுதிய சாஸ்திரமும் பொய்யாகிவிட்டதே..

எது எது எப்போது நடக்குமோ..
அது அது அப்போது நடக்கும்..
அதுதான் யதார்த்தம்..

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=12294
போட்டோ: அரவிந்தன்(கூகிள் நெட்)

சொர்க்கத்திலிருந்து ஓர் மின்னஞ்சல்..2

முன்னால் காதலனே
கண்முன்னால் கண்ட உன் மடல்..
கண்டு இதயம் டைப்படிக்க
என் விரல்களும் டைப்படிக்கிறது..

நல்ல செய்தி ஒன்று கூறினாய்..
நீ தண்டனை பெறுவதாக..
ஆஹா....அதற்காக நான் செய்த
பிரார்த்தனைகள் வீண் போகவில்லை...

சித்திரகுப்தாவிற்கு பதிவிலிடுகிறேன்..
சித்திரவதைகளைக் கூட்டி
சிறையிலிடும்படி..
சிந்தனை செய்யாதே..தப்பிக்கலாம் என்று..

பெண் என்றால் பேயும் இரங்குமாம்..
பேய் என்றால் நானும் இரங்குவேன்..ஆனால்..
நீயோ...பேயுமில்லை பிசாசுமில்லை..
துரோகி...மன்னிக்கவே முடியாத பாவி நீ..

நிலவு போல நீ வந்தால்..
வாழ்க்கையில் வெளிச்சத்தைக் கண்டிருப்பேன்..
வெளிச்சம் போல வேஷம் போட்டாய்..
விழுந்து நானும் எரிந்தது போதும்..நோ எக்ஸ்கியூஸ்..

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=12234&pid=152316&mode=threaded&start=#entry152316

சொர்க்கத்திலிருந்து ஓர் மின்னஞ்சல்..




அன்பே நலமா..
சொர்க்கத்திற்கு வந்த நான்..
உனக்குச் செய்த துரோகத்தால்
நரகத்திற்கு தள்ளப்படும் நிலையில் தவிக்கிறேன்...

நரக வேதனைகளுக்குப் போகும் முன்..
நான் உனக்கு அனுப்புகிறேன் ஓர் மின்னஞ்சல்..
நடந்ததெல்லாம் மறந்து இதை ஏற்றுவிடு..

என்ன இடையூர்கள் வந்தாலும்..
என்னவள் நீயன்றோ வேறொருத்தியுமில்லை
என்றுனக்குச் சொல்லிவிட்டு..

அன்றவன் தந்த ஐடியா கேட்டு..
அநியாயமாக உன்னைக் கைவிட்டுவிட்டேன்..
அதுமட்டுமா என் கண்ணே..

பொல்லாத பெண் ஆசையில்..
இல்லாததெல்லாம் சொல்லியுன்னை..
இழிவு படுத்திவிட்டேன்..

பொல்லால் அடித்தாலும் பரவாயில்லை..
கல்லால் அடித்தாலும் பரவாயில்லை..
புழுவால் என்னை குளிப்பாட்டி எடுக்கிறார்களே..

எங்கே நான் போய்ச்சொல்ல..
என்னவளே எனக்காக இரங்கி ஒரு மெயிலிடு..
எமன் அண்ணா யோசித்து தண்டனைகளை குறைத்துவிடுவார்.

அடுத்த மின்னஞ்சல் வருமுன்..
ஆருயிரே மன்னித்து மனமிரங்க மாட்டாயா..
மறு பிறப்பு ஒன்றிருந்தால் மனம் வந்து மணமுடிப்பேன் உன்னையன்றோ.

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=12234(பதில் போகும்..)

புதன், 25 நவம்பர், 2009

மீளாத சோகம்..


மீளாத சோகம்..எனக்குள்..
யாராலும் தீர்க்க முடியாத சோகம்..

பாசத்தோடு வளர்த்த பறவையை
பருந்து ஒன்று வந்து கொத்திக்
கொ(ன்று)ண்டு போனதே..

ஆசையோடு கட்டிய மணல் வீடு.
அலை வந்து சிதைத்து விட்டதே..

பக்கம் பக்கம் பார்த்து ஒட்டிய பட்டம்..
பனை மரத்தில் சிக்கித் தவித்துக் கொண்டதே..

மூச்சுப் பிடித்து ஊதி ஊதி பெரிசாக்கிய
பலூனும் உடைந்து போனதே...

மழை பெய்த வெள்ளத்தில்
நான் விட்ட காகிதக் கப்பல்
கரை சேராமல் தாண்டு போனதே..

இன்று நினைத்தாலும் மீளாத சோகம் எனக்கு..
யாராலும் தீர்க்கமுடியாத சோகம்..

நிலவே கலங்காதே..




ஓ....நிலவே
நீயும் அழுகிறாய்...
கவிஞர்களுன்னை கவிவரிகளால்
கலங்கப்படுத்தி விட்டார்கள் என்றா..?

தேய்ந்து தேய்ந்து வளருகிறாய்..
என்றதால்...உன்னை..
வருத்தி வருத்தி அழுகிறாயா..?

நாடுகள் பலவற்றிலிருந்து வந்து..
தேடுதல் பலவாயிரம் செய்து..
உன்னை நாசமாக்கி படமெடுத்தார்களென்றா..?

துணையேதுமில்லாமல்..
தனித்து விடப்பட்டு..
மேகத்தின் ஆடைபட்டு..
விதவைபோல் காணப்படுகிறாய் என்றா..?

இத்தனை கேள்விகளை கேட்டு..
இன்னும் உன்னை அழவைக்கிறேன்..
உன் அழுகைக்கு நானும் ஒரு காரணம்..
மன்னித்துக்கொள் நிலவே...

படித்தேன் உன்னைப்பற்றியதோர் செய்தி..
நிலவிலும் நீர் உண்டாம்..

எழுந்தது எனக்குள்ளே பல கேள்வி..
அதனால் கேட்டேன்
பதில் கூறு...ஏனெனில் நானும் அழுகிறேன்..
விடையே இல்லாத கேள்விகளைக்கேட்டு..

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11638

அதி காலைப்பொழுதில்..




அதிகாலைப் பொழுதில் நடந்து பார்..
உன் காலடி ஓசையைத் தவிர..
எந்த ஓசையும்
உனக்கு கேட்காது..

கண்கள் காணும்
காட்சிகளை ரசித்துப் பார்..
கவலைகள் எதுவும் மனதில்
கிட்ட நெருங்காது..

புதிய நாளை இன்முகத்தோடு..
வரவேற்றுப் பார்..

காக்கை கூட உன் அருகில்
வந்து கவி பாடும்..
தாவிச் செல்லும் அணிலும்..
ஓடி வந்து உன் தோள் சாயும்..

படபடவென்று பட்சிகள்...
ஒன்றாகப் பறந்து..
இயற்கையை ரசிக்க..
நேர் வரிசையாகயிருந்து
மின் கம்பியில் ஊஞ்சலாடும்..

தத்தி தத்தி
சின்னக் குருவிகள்..
கொத்தி கொத்தி இரை தேடும்..

வீட்டைக் காக்கும் நாய் கூட..
வீதி வரைக்கும் வந்து..
வாலை ஆட்டி மகிழ்ந்துகொள்ளும்..

அதிகாலைத் தென்றல்..
உலா வரும் நேரம்.. மெல்லிய குளிரில்
உன் தேகம் நனைந்து
மனம் களிப்புறும்..

வீதிகளுக்கு விடைமுறை
கிடைத்தது போல்..
எந்த போக்குவரத்து சலனமுமில்லாமல்..
அமைதியாக உறக்கம் கொள்ளும்..

எங்கிருந்தோ வந்த பூனைக்குட்டிகள்..
கால்களை உள்ளே மடக்கி..
மெல்ல தலையைக்குனிந்து
ஒன்றையொன்று பார்த்து
புன்முறுவல் செய்யும்..

மெல்ல வீசும் காற்றில்..
காகிதச் சருகுகள்..
ஓடி ஓடி ஓய்ந்து கொள்ளும்..

புத்தம் புது மலர்கள்..
பனித்துளிகள் பட்டு..
முகம் கழுவிக்கொள்ளும்..

ஞாயிறு வருகை கண்டு..நாணத்தால்
திங்கள் மெல்ல தன் முகத்தை..
மேகத்துனுள் ஒளித்துக்கொள்ளும்..

ஒளிரும் நட்சத்திரங்கள்..
விடியும் பொழுதில்..
தம் போர்வைக்குள்..
முடங்கிக் கொள்ளும்..

அதிகாலைப் பொழுதில்
நடந்து பார்..
மனம் அமைதியாகயிருந்து....
புது ராகம் இசைக்கும்..

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11538

சனி, 21 நவம்பர், 2009

கவிதை பாடும் அவள் இதழ்




இதழ்கள் விரிப்பழகில்..
உன் இதழ்களின்
சிரிப்பைக் கண்டேன்..

********************************

இதழ்கள் விரித்து..
இந்த ரோஜா
இதயம் மலர்ந்து..

முகம் சிவந்தது..
நாணத்தாலா..
நான் வந்ததாலா..


*********************************
யாரோ சொல்லிக்கொண்டு
போகிறான்..
அவள் இதழ்களைக் காணவில்லை என்று..
பையித்தியக்காரனவன்..
இதழ்களை காணத் தவறிவிட்டான்..

**********************************

கரு வண்டுகளும்..
உன்னைக் காதலிக்கின்றவோ..
வைத்த கண்வாங்காமல் பார்க்கின்றதே...

**********************************

இதழில் தேன் குடிக்க..
இமைகளில் கரு வண்டுகள்..
வட்டமிட்டு கவி பாடுகிறதோ..
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11536

உன்னில் காதல்..


மனதோடு பேசிப் பேசி..
வார்த்தைகளை உதிராமல்..
பேசிய வார்த்தைகளை பகிர்ந்து..

நித்தமும் அச்சடிக்க..
உன்னை மட்டும் காலிக்கிறேன்
உனக்கும் சொல்லாமலே..

நிலவுத் தாய்..




வருவாய் தருவாய்..
அருள்வாய் எனதுயிரே..
துயர் கொண்ட எனதுள்ளம்..
துடைத்திட விரைந்தோடி வருவாய்..

தினம் உன்னையே அழைத்தேன்..
மனம் தினம் பலமுறை தொழுதேன்..
மனம் கனத்து தினம் அழுதேன்..
சினம் கொண்டு நான், நீயின்றி துடித்தேன்..

தூறல் மழையில் நான் நனைந்தாலும்..
துடித்துப்போய் சேலைத்தலைப்பால் தலைதுடைத்திடுவாய்..
கார் இருளில் கைபிடித்து கண்சிமிட்டும் நட்சத்திரமாய்..
பார் முழுதும் பவணி வரும் நிலவும் நீதான் என் அம்மா.

உள்ளம் முழுதும் உந்தன் எண்ணம்..
கள்ளம் ஏதும் இல்லாத கொள்ளையின்பம் கண்டேன்..
வெள்ளம் போல் கொண்ட பாசம் தரவா..
தர வா..எனதுயிர் தாயே என்னோடு வா..

--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

வெள்ளி, 23 அக்டோபர், 2009

வஞ்சக வலையில்..


மனிதன் செய்த
வஞ்சக மின்சார வலையில்..
சிக்குண்டு

அநியாயமாக
தம் உயிர்களை
மாய்த்துக் கொண்ட..

ஏதும் அறியாத
அப்பிராணி உயிர்கள்...

அவனுக்கென்ன..

மரம் இருந்தாலும்
நிழல்..
இறந்தாலும்
விறகு..

அதுபோல்..
செத்தது மாடுகள் தானே..

அதன் பாலைக்குடித்தான்..
இனி தோல எடுத்து
மேளம் அமைத்து

அடிச்சுப் பார்த்து ஆட்டம் போடுவான்..
அவன் ஆட்டம் அடங்கும் போது..
இந்த மாட்டுத் தோல் அவனுக்காக
அப்பவும் இசையாகப் பேசும்..

(படத்தைப் பார்த்தவுடன் மனசு கலங்கிறது. அதனால் கிறுக்கியது இது)
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11329

நீ..


நான் என்னை
மறந்து நினைக்கும் போதெல்லாம்..
நீ மட்டும் தெய்வமாகிறாய்..

காரணம் கேட்டு..
மனச்சாட்சியை கேள்வி கேட்கும் பொழுதும்..
அங்கே நீ மட்டும் ஆட்சி செய்கின்றாய்..

தீபாவளி இனிப்புப் பண்டங்களை
ருசித்து சாப்பிடும் போதும்..
இனிக்க இனிக்க நீயே முன் நிற்கின்றாய்..

கோவிலுக்குச் சென்று..
அமுது உண்ணும் போதும்..
நீ தந்த அமுது தான் ஞாபகம்..

இனிப் போதும்..போதும்..
உறங்கவும் முடியவில்லை..
உண்ணவும் முடியவில்லை..

எண்ணங்கள் யாவும்..
மரத்தின் கிளை, இலை போலவும்..
வானின் நட்சத்திரங்கள் போலவும்..

நீயே தான்.....
என்னுள் சங்கமித்துள்ளாய்..
உன் நினைவேயன்றி வேறு எதுவுமில்லை...

நீ எனக்கு கற்பித்த..
வளர்த்த தமிழ்..
உப்புக் கடல் நீராய்..என் உதிரத்தில்..
என்னுள் உறைந்து கிடக்கின்றது..

கோபுர கலசம் போல்..
என் வாழ்வின் சுடர் ஒளி நீ..
உள்ளங்கை ரேகை போல்..
உள்ளத்தில் கலந்திருக்கும் உயிரும் நீ..

என் வாழ்வில் வந்த வசந்தம்..நீ
மெய்யுள் கலந்த பந்தம் நீ..
என்றும் என் சொந்தம்..நீ..

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11216

படத்தில்..


வீடெல்லாம் ஒப்பாரி..
பாட்டி இறந்து விட்டார்....
அப்பா மட்டும் புன்னகை படத்தில்..
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11190