செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

நீயும் அழகுதான்..

Glitter Graphics

அன்றொரு பருவத்தில்

அழும் குழந்தையாய் நானிருக்க..

அன்போடு அம்மா கூறிய வார்த்தைகள்..


அதோ பார்..

இருண்ட வானில் மிளிரும்

அழகழகான நட்சத்திரங்கள்..



ஓ..

எண்ணவே முடியல்லையே..

எண்ணிலடங்கா நட்சத்திரங்கள்..

ஆமா..எப்படி..?

ம்....

இங்கு இறந்தவர்கள்

அங்குதான் ஜொலிக்கிறார்கள்..வெள்ளியாக..


இப்போது அமைதியாகப் பார்க்கிறேன்..

நீகூட அழகாகத்தான்....இருக்கிறாய்..

என் அம்மாவும் கூடவே அங்கேயிருப்பதால்
.

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10878&st=0#entry146287

திங்கள், 24 ஆகஸ்ட், 2009

என்னில் நீயே..‏

Glitter Graphics

என் காதலே..என்னில் காதலா..
எத்தனை நாள் உன் நினைவுகளால்..
என் தூக்கத்தை தொலைத்திருப்பேன்..

பார்த்திருக்கும் போது நீ வராமலே போகிறாய்..
பாதி உறக்கத்தில் எனை மறக்க மெல்ல வந்து
காதல் கதை பேசுகிறாய்..

இனிமையான கனவுகூட
முற்றும் காணாத நிலையில்
உன்னால் தடங்களான
என் வருத்தங்கள் உனக்கெங்கே புரியப்போகிறது...

என் மீது நீ கொண்ட காதல்...
அதனால் நான் கொண்டேன் தொல்லை..
தூக்கம் கெட்டு நிலவு வரும் நேரமெல்லாம்
விடாமல் துரத்திக்கொண்டு வரும் உன் நினைவு..
என்னில் நீயே என்பதால்..
நச் என்று என் கையால் தந்தேன்..

தொலைந்தாய் நீயும்..கொசுவே..
தொடருகிறேன் நானும் என்..
இனிமையான தூக்கத்தை.

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10257

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

நன்றி‏

Glitter Graphics

கடந்த கால நினைவுகள்..
உடைந்த மனதில்
ஆலமரவேராய் ஆழப்பதிய..

முகம் தெரியாத நீயூம்..
அறிமுகமில்லாத நானும்..
நட்பெனும் அன்பால்
இணையத்தில் இணைந்து..

இன்றோடு ஆண்டுகள்
இரண்டாயிற்று..
இன்னும் நான் மறக்கவில்லை
அன்பால் நட்பால்..நீ கூறிய
அழகான அறிவுரைகளை..

நடந்து வந்த பாதையில்
காலில் குத்திய முள்ளு தானே..
தூர தூக்கி எறி..என்றாய்..

பாதையைப் பார்த்து நட
பாதியிலே வந்த துன்பம்..அது
தேடி அலைந்து போகாதே..என்றாய்..

மீதியுள்ள அழகான வாழ்வை
மீண்டும் அமைத்துவிடு
அழகிய நந்தவனமாக..என்றாய்..

ம்..
நினைத்துப்பார்க்கிறேன்..
அருகில் இருந்து கூறியது போல
அன்பான வார்த்தைகளால்..

நட்பெனும் பூந்தோட்டத்தில்
அன்பெனும் மலர்களால்
இன்னும் பல ஆண்டுகள்
பூத்திருப்போம்..


நண்பா உனக்கு
நன்றி சொல்லி நம்
நட்பைப் பிரிக்கவில்லை..
உன்னைக் கண்டு கொண்ட
நாளுக்காய் ஓர் நன்றி மட்டும்.

கேசம் வைத்த நேசம்.


தென்றல் மெல்ல வந்து
என்னைத் தீண்ட..
உன் செல்லக் கன்னமதை
நான் தழுவ..

உன் உரிமை நான்..
மறந்து நீயும் என்னைத்
தள்ளித் தள்ளி விடுகிறாயே..

தென்றலே வீச மறந்துவிடாதே..
விரல்களால் முடிகோதி பேசும்...
அவள் விதம்..
என்னை மறுபடிமறுபடியும் அவள்..
கன்னம் தொட அழைகின்றது...

முடிசூடா மன்னன் தலைமுடி நான்..
எனக்குள் பெருமை பேசிக்கொண்டு..
உன்னால் சிரிக்கிறேன்.
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10521

இருளை அகற்று..



முடிவில்லா தொடரை எண்ணி
வலி கொண்ட நெஞ்சோடு பதற..
உள்ளிருக்கும் வரை உலகம் கூட..
கபடம் என உள்மனம் சொல்ல..

பசி கொண்ட மானிடர் பட்டினியில் சாக..
ருசி கண்ட கயவர்கள் கழுகுகளாக மாற..
கசிகின்ற இதயங்களில் கவலைகள் படர..
வசிப்பிடமில்லாத வாழ்வில் வாழ்க்கையை தேட..

இருளைப்போக்க கிடைத்த தீக்குச்சி போல..
இருண்ட வாழ்விலும் ஒளி வீசும்..மெல்ல.
இருளில் இருந்து கொண்டு பேசுவதை விட..
வெளியில் வந்து வெளிச்சத்தில் பேசுகிறேன்.

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10478

என் கண்கள் தூங்காது..



நீண்ட நேரப் பயணத்தில்
நீ இங்கு வந்தபோது
நீயும் நானும் இதயங்கள்
இடமாறி இன்னல்கள் தவிர்த்து

இன்புற்று சிரித்திருந்தோம்..
நாட்கள் போவது தெரியாமல்
நாளும் பொழுதும் பறவைகள் போல்
நாளைய நாளை மறந்திருந்தோம்

வேளை வந்த போது
நீ போகும் நாளும் வந்த போது..
வேதனையில் தீயிலிட்ட
புழு போல் நானும் மனம்
வெந்து துடித்தேன்..

துடித்தது நான் மட்டுமா
ஏன் வந்தோம் ஏன் பிரிகிறோம்..
விடை தெரியாமல் நீயூம் துடித்தாய்..அழுதாய்..
ஆறுதல் கூற யாருமற்ற நிலையில்..

அழுத விழிகளோடு கையசைத்து
கண் மறைவில் நின்று
பறந்து சென்று விட்டாய்..
தூங்காத விழிகளோடு இன்றும்
உன் நினைவில் உனக்காக

என் மனம் எழுதத் துடித்த
வரிகளோடு நினைவுகளை மீட்டி
உனக்காக தூங்காத என் கண்கள் கவிபாடுகிறது.

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10764

சனி, 15 ஆகஸ்ட், 2009

நேசமுடன் வாழ்த்துகள்!

zwani.com myspace graphic comments

புதிய கவிதை புனையும்
கலைஞரே நெஞ்சில்
உண்டான காயம்தான் என்ன..

நினைவு அலைகள்
தினமும் துரத்திக்கொண்டிருக்க..
ஆற்றலையும் ஆக்கத்தையும்
நெஞ்சுக்குள் புதைத்துவிடலாமா..

கைவிலங்கு போட்டு
ஆதவன் கரங்களை
அடக்கிப் பார்ப்பது பாவமில்லையா

கண்ணுக்கு அழகான கவிதைகள்
நெஞ்சுக்குள் நிறைந்திருக்கும் வரிகள்
அத்தனையும் எழுதும் இதயம்
இன்று கவி தொடர மனம் மறுப்பதும் ஏனோ..

கவி மாலையான பின்பு
காகிதத் தோள்களுக்கு
மாலையாவதற்கு தடைவிதிப்பதும் முறைதானோ..


தொடரும் கதைக்கு முற்றும் போடாமல்
முற்றும் துறந்தமுனிவரைப் போல்
கடும் தவமாய் காலத்தை வீணடிக்கலாமா..
எதிர் பார்க்கிறேன்.. வாழ்த்துக்களோடு எழு(து)வாய்..


அன்னையைப் போல்
அறிவுரைகள் சொல்லும்..
உண்மையைச் சொல்லவா..
அது உன் கவிவரிகளல்லவா..

சென்ற பொழுதைகளின் ரணங்களை
தேடிச்சென்றே நீயும் துன்பப்படாதே
நின்றே நீயூம் சாதித்து விடு..
புதுப்புது கவிதைகளை புனைத்துவிடு.