செவ்வாய், 29 செப்டம்பர், 2009

சுகமான நினைவுகள்..

வாசலில் பார்த்திருப்பேன்..
அவன் வருகை கண்டு
உள்ளம் உவகை கொள்வேன்..

சுற்றவர நீலமும் சிவப்பும் கொண்ட...
கவரை அவன் கையில் கண்டவுடன்..
துள்ளிக் குதித்து ஓடிச்சென்று பெற்றிடுவேன்..

பரவசமாக படித்திடுவேன்..
பக்கத்து தோழியிடம் கொண்டே காட்டிடுவேன்..
கண்டவர் நின்றவர் எல்லோரிடமும்..

சந்தோசமாகச் சொல்லிடுவேன்..
என் அவர் எனக்கு அனுப்பிய கடிதம்..என்று..
ஓடி ஓடி உரக்கச் சொல்லுவேன்...

அன்பான முத்தங்கள் அதில் நிறையவுண்டு..
அள்ளி மணந்திடும் மல்லிகையும் அதிலுண்டு..
எண்ணங்கள் யாவும் எண்ணிலடங்கா சேதிகள் அதிலுண்டு..

குறைந்தது 8 பக்கங்கள் ஒரு கடிதத்திலுண்டு..
ஓரவிழிப் பார்வையில் பார்க்கும் போது..
யாரும் பார்க்கிறார்களோ என்ற எண்ணமுமுண்டு..

ஆயிரம் முத்தங்கள் அதிலிடுவேன்..
இரவுப் பொழுதினில் இருட்டினிலும் படித்திடுவேன்..
இருவிழி கண்ணீர் வழிந்தோட..இருபது தரம் படித்திடுவேன்..

நெஞ்சோடு அனைத்தபடி..
நிலவு மட்டும் விழித்திருக்க..
நினைவுகளால் விழி நீரால் நிறைந்திருக்கும்...

கனவுகள் மட்டும் வாழ்க்கையாய்..
நினைவுகளில் கதைகள் பல சொல்லி..
காலங்கள் கடிதஉறவில் மலர்ந்திருக்கும்..

நினைத்துப்பார்க்கிறேன்...
நிஜங்களை நினைக்கும் போது..
நிழல்கள் கூட சுகமான கதைகள் தான்..

--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

வண்ணனின் உண்மை வரிகள்..

Glitter Graphics


அருமை என்பது,
யாழ்ப்பாண ஒடியல் கூழ்
பெருமை என்பது,
என் தாயிற்கு மகனாகப் பிறந்தது

சிறுமை என்பது,
நான் டுபாயில் வாழ்வது
வறுமை என்பது,
நான் பாசத்திற்காக ஏங்கியது

கொடுமை என்பது,
வன்னியில் மனிதர்களை நிர்வாணத்துடன் வைத்து சுட்டது
கடுமை என்பது,
எனது உழைப்பு

இனிமை என்பது,
உங்கள் தமிழை படிப்பது.

வண்ணனின் உண்மை வரிகள்..
(எனது முகவரிக்கு அஞ்சலிடப்பட்ட தம்பி அபிவண்ணனின் வரிகள்)



திங்கள், 28 செப்டம்பர், 2009

வாழ்வு உன் கையில்.


மரம் நிலைக்க
அதன் வேர் காரணம்..
அதுவே நீடுழி வாழ..
நல்ல வளமான மண் காரணம்..

நீ வாழ..
பெற்றோர்கள் காரணம்..
உன் வாழ்வு செழுமை பெற..
உன் மனம் தான் காரணம்..

நல்லதையே நினை..
நன்மையே செய்..
உள்ளத்தால் உண்மையாய் நட..

உயிருள்ளவரை நல்ல மனம் உனக்கிருந்தால்..
உலகில் அதைவிட பெருமதியானது எதுவுமில்லை..
உன் வாழ்வு உன் கையில்.
--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11002

வழி(லி)


முட்டி முட்டி தலைமுழுக்க வலி..
வழி தேடி தவிக்கும்..
தொட்டி மீன்கள்..

--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10989

வேண்டுதல்..


எந்தச் சாமிக்கு வேண்டுதலோ..
இலைகளை மட்டும் உதிர்கின்றனவே
மரங்கள்..(AUTUMN)

--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி

வெளிச்சம்..



எந்தச் சந்தர்ப்பத்திலும்..
ஏழைக்கென்ன கவலை
இலவசமாய் நிலா வெளிச்சம்..

____________________________
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி

ஐயோ பாவம்..


ஏழையின் சிரிப்பில்..
இத்தனை அடிகளா..
காந்தியின் முத்திரை..

_______________________
கொடுத்து வாழ்....
கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

திங்கள், 14 செப்டம்பர், 2009

பெண்ணே நீயும் பெண்ணா..


சோலை ஒன்று நடந்து வருகிறதே..
சேலை கட்டி என் முன்..
நீ வரும் போது..
************************************

தண்ணீர் இல்லாமலே..
மீன்கள் நீந்துகின்றனவே..
உன் விழிகளில் பார்க்கிறேன்..

*************************************

பூக்கள் கூட மண்டியிட்டு..
உன் தோள் சாய்கின்றனவே..
நீ அருகில் இருப்பதாலோ...

--------------------
கொடுத்து வாழ்....
கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10951

சுமைகள்..



பரந்த மனசு..அதனால்தானோ..
பலபேருடைய கோரிக்கைகளையும்..
நீ சுமக்கின்றாய்..

**************************************

நீயும் தாய் தான்..
தினம் சுமக்கிறாய்..
கடிதங்களாக..

**************************************
யார் செய்த சாபமோ..
நீ மட்டும் நன்றாக
வாங்கிக் கட்டிக்கொள்ளுகிறாய்..

***********************************

பாவம் நீ..
எல்லாத்தையும் ஏற்றுக்கொள்ளுகிறாய்..
வாயிருந்தும் ஊமை என்றபடியாலோ...

--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10948

சந்தோசம்..

Glitter Graphics

மழை வருவது
மண்ணுக்குச் சொந்தம்..

செடிமுளைப்பது..
வேருக்குச் சொந்தம்..

அலையடிப்பது
கடற் கரைக்குச் சொந்தம்..

தேனுண்ணும் வண்டு..
மலருக்குச் சொந்தம்....

கருவில் வளரும் குழந்தைக்கு..
அன்னை மடிசொந்தம்..

அன்பே நீ வரும், தரும் சொந்தம்..
இந்த மங்கைக்கு மனச் சந்தோசம்..
--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10916

புதன், 9 செப்டம்பர், 2009

சந்தோசம்..



மழை வருவது
மண்ணுக்குச் சொந்தம்..

செடிமுளைப்பது..
வேருக்குச் சொந்தம்..

அலையடிப்பது
கடற் கரைக்குச் சொந்தம்..

தேனுண்ணும் வண்டு..
மலருக்குச் சொந்தம்....

கருவில் வளரும் குழந்தைக்கு..
அன்னை மடிசொந்தம்..

அன்பே நீ வரும், தரும் சொந்தம்..
இந்த மங்கைக்கு மனச் சந்தோசம்..

--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

நவீன சங்கம்..



நிலவுப்பொழுதில்..
நீயும் நானும் மற்றும்
சுற்றத்தாரும், மற்றவரும்..

வெவ்வேறு வீடுகளில் இருந்து வந்து
ஒரு இடமாகச் சந்தித்து
கூடிப் பொழுதைப்போக்க..

சங்கம் வளர்த்த
அந்தப்பெரிய மரம் தந்த நிழல்..
இன்று அனாதையாக அது இருக்க..

இன்று அவரவர்..
தத்தம் வீடுகளிலிருந்து..
உலகெங்கும் உறவாட வைக்கும்..
நவீன சங்கம் வளர்க்கும் கணனியாம்
.