வியாழன், 26 பிப்ரவரி, 2009

அடுத்த கணம் யாரறிவார்...?



வான் பொழியும்
மழை நீர்
இலையில் விழுந்து
வழிந்தோடும் அதன் நிலையில்

தவிக்கின்ற மனதுகள்
தாகம் தீர்க்க..
கொதிக்கின்ற பூமிச் சூட்டில்..
பாதங்கள் பற்றியெரிய..

பக்கத்தில் தணல்தெறிக்கும்
குண்டுகள் விழ
மண்ணில் விழுந்தான்
அவளை அன்னையாக்க
மழலையாக அவனும்...

அள்ளி அணைக்க
அவளிடமில்லை இரு கரங்கள்..
அழும் குழந்தையாக கதறியழ
அருகே ஓடும் குருதி அதன் பசியாற..

தோண்டும் குழி யாவும்
குருதி குளம் நிரம்பி வழிய
இருட்டான வாழ்வின் ஓட்டத்திற்கு துணையாக
ஆங்காங்கே எரிந்து கொண்டிருக்கிறது..

உயிருள்ள மனிதர்களின்
கூக்குரல் ஒலிகளோடு...
உயிர் மனிதப்பிணங்களின்
அவலத்தின் ஒளியில் பாதை கடக்க...

ஓடிஓடி வாழ்வின் ஓரத்திற்கே ஓடி..
ஒளிந்து கொள்ள இடமுமின்றி..
அழிந்து கொண்டே போகின்றதே..தமிழினம்.
அடுத்த கணம் என்னாகும் என யாரறிவார்..?

ஏதும் அறியாத அப்பாவிகள்..
தினம் உடல்கள் துண்டுகளாகி
கடும் போரில் கடுமையாக வதைக்கப்பட்டு
படும் வேதனைகளுக்கு முடிவேதுமில்லையா...?

--------------------

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10181

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

திங்கள், 23 பிப்ரவரி, 2009

தீராத கொடுமை தீருமா...?




தீராத கொடுமையை

தீர்த்துவைக்க யாருமே இல்லையா



ஆயிரமாயிரம் அப்பாவிகள்

அன்றாடம் அழிகின்றனரே..

ஆண்டவா இதற்கு ஒரு தீர்ப்பில்லையா..


மெலிந்த உடலும்..

கசிந்த மனமும்..

குருதி வடியும் கண்ணீரும்..

பதுங்கு குழிகூட

பாதுகாப்பு இன்றி


வேதனையின் விளிம்பில்

வெந்து மடியும்

எம் மினம்..


மனித வாழ்க்கை இல்லாது இருந்தும்

கால் நடையாக வாழத்தனிலும்

ஒரு சுதந்திரம் கூடஇல்லையே..


எம் தமிழனப் படுகொலைகள்

உலகக் கண்களுக்கு மட்டும் ஏன்

இருளாகவே இருக்கின்றதே...


நித்திம் நித்தம் சாவை எதிர் நோக்கி

நிர்மூலமாகும் எம் மக்களுக்கு

நீதி தேவதை கண்திறக்காதோ..


தீராத கொடுமையை

தீர்த்து வைக்க யாருமே இல்லையா..?

தீயில் வெந்து துடிக்கும் அப்பாவிகளுக்கு..நல்ல

தீர்ப்பு வழங்க எவருமே வரமாட்டார்களா..?

செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

வாழ்வு உன் கையில்.


எடுத்ததுக்கெல்லாம்
அதையே நம்பி நம்பி
பழக்கப்பட்டு பணத்தை
வாரி இறைத்த அவன்..
இன்று பதுங்கு குழியில்...

வசந்தம் வீசும் என்றவன்..
வாழ்வில் மாலையாகமுன்பே
மலர் கருகிப்போனதுபோல்..
கலி வந்து அவனையும்
கவலையில் ஆழ்த்தியது...

ஐயோ அம்மா என்றொரு அவலக்குரல்..

குழியில் இருந்தபடி விழி வீசினான்...
ஊருக்கெல்லாம் சாஸ்திரம் பார்த்த
நம்பிக்கையான மனிதரும் சாவின் பிடியில்..

ஓ.......இன்னுமா இருக்கிறீர்கள்..?

நம்மை வாழவிடாதவர்..
வாசல் வரை வருவார் என்று
என்றாவது உங்கள் காண்டம் சொல்லவில்லையா..?

ஊருக்கெல்லாம் ஒரு நாள்
எம காண்டம் என்று
எப்போதாவது கண்டதில்லையா...?

ராகு காலம் வந்து
ஊரே சுடு காடாகும் என்று
ஒரு நாளும் பார்த்ததில்லையா..?

எல்லாமே என் மனதோடு கேட்டுக்கொண்டு..
ஒட்டியிருந்த புழுதியோடு தட்டிக்கொள்ளுகிறேன்..
எதையும் நம்பாத அவர்களை வாழ்த்திக்கொண்டு.
--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி


http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10075

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

அடிக்குடில் ( அடிமைக்குலம் : வேடர் இருக்கும் ஊர்: சிற்றூர்)




நாடு தந்த அடாவடியால்..
காடு வந்து ஆராரோ பாடுகிறாள்..
அடிகள்(முனிவர்) வாழ்ந்த வனத்தில்..
அமைதியாய் இவளும் அகதியாகிறாள்...

பாடித் திரிந்த காலம் எல்லாம்
பாதி வாழ்வில் கண்ணீரால் கதைசொல்லுகிறாள்..
அடிச்சியும் ( அடிமைப்பெண்) இவளாக அடிசிலுக்கு( உணவு )
அல்லும்பகலும் அலைந்து திரிந்தாலும் அடிவயிற்றுக்கு வருமையில் வாடுகிறாள்....

அடங்காத அசுரர்களால் அப்பாவிமக்களும்..
அநியாயமாக அல்லல் படும் காட்சிகள் கண்களை குளமாக்கின்றதே..
அவநெறி புரிவோர் யாராகினும் ஆண்டவன் தண்டிப்பான்..
அது வரை அலந்தலை ( கலக்கம் ) விட்டு அமைதியாய் பிரார்த்தனை செய்மகளே.

*************************
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10035
கொடுத்து வாழ்....
கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி