வெள்ளி, 23 அக்டோபர், 2009

நீ..


நான் என்னை
மறந்து நினைக்கும் போதெல்லாம்..
நீ மட்டும் தெய்வமாகிறாய்..

காரணம் கேட்டு..
மனச்சாட்சியை கேள்வி கேட்கும் பொழுதும்..
அங்கே நீ மட்டும் ஆட்சி செய்கின்றாய்..

தீபாவளி இனிப்புப் பண்டங்களை
ருசித்து சாப்பிடும் போதும்..
இனிக்க இனிக்க நீயே முன் நிற்கின்றாய்..

கோவிலுக்குச் சென்று..
அமுது உண்ணும் போதும்..
நீ தந்த அமுது தான் ஞாபகம்..

இனிப் போதும்..போதும்..
உறங்கவும் முடியவில்லை..
உண்ணவும் முடியவில்லை..

எண்ணங்கள் யாவும்..
மரத்தின் கிளை, இலை போலவும்..
வானின் நட்சத்திரங்கள் போலவும்..

நீயே தான்.....
என்னுள் சங்கமித்துள்ளாய்..
உன் நினைவேயன்றி வேறு எதுவுமில்லை...

நீ எனக்கு கற்பித்த..
வளர்த்த தமிழ்..
உப்புக் கடல் நீராய்..என் உதிரத்தில்..
என்னுள் உறைந்து கிடக்கின்றது..

கோபுர கலசம் போல்..
என் வாழ்வின் சுடர் ஒளி நீ..
உள்ளங்கை ரேகை போல்..
உள்ளத்தில் கலந்திருக்கும் உயிரும் நீ..

என் வாழ்வில் வந்த வசந்தம்..நீ
மெய்யுள் கலந்த பந்தம் நீ..
என்றும் என் சொந்தம்..நீ..

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11216

கருத்துகள் இல்லை: