திங்கள், 9 ஜூன், 2008

காத்திருப்பு.




அன்னை மடியில் பிறந்து
மண்ணின் போர்வையில் முகம்
புதைத்து கண்ணீர் வற்றி
இன்னும் ஏதும் கிடைக்குமா நான் வாழ
என்றோ நீயும் தரையை உற்றுப்பார்க்க...

எங்கிருந்தோ வந்த பருந்து
விருந்து ஒன்று விரைவில்
கிடைத்ததை எண்ணி
வருந்தும் நிலையறிந்தும்...

கிடைத்த விருந்தை
அடைய நினைக்கின்றதோ...
அன்றி..
மனிதனாய்ப்பிறந்து
மனித நேயங்கள் மறைந்து..

வறுமையிலும் கொடுமையான
பட்டினி எனும் நோய் வாட்டி
கிள்ளிப்பார்க்ககூட
எள்ளலவும் சதையின்றி..

எடுப்பார் யாருமின்றி
பிழைப்பார் எவருமின்றி
இதயம் மட்டும் துடிக்க
இப்படியும் உணவு உண்டு
பிழைக்க வேண்டுமா என நினைக்கின்றதோ...?

அல்லது..

தீனி கிடைக்காமல் பட்டினியால்
நான் இறக்கும் போதும்
இருக்கும் சதையை உனக்கு
தீனியாய் தருகிறேன் எடுத்துக்கொள்

என மனிதன் மன்றாட்டமாய்
தலைகுனிந்து கேட்கிறானோ..?

எலும்பு மனிதன் எழும்ப நினைக்கிறான்..
எதிரில் பருந்து உணவை நினைக்கிறது..
யார் யாருக்கோ காத்திருப்பு
யாருக்குத்தான் அதில் நல்ல தீர்ப்பு.
--------------------------------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி