திங்கள், 21 டிசம்பர், 2009

யாரோ அவர் யாரோ..



ஆண்டு பத்து முடித்தபிறகு..
எனை ஆளப்போகும்
மன்னன்தான் யாரோ என்றறிய..

ஆலய வாசலிலே
அமர்ந்திருந்த
கிளி ஜோசியரை நாடினேன்..

ஒன்றன்பின் ஒவ்வொன்றாக
எடுத்துப்போட்டுக்கொண்டேயிருந்த கிளியிடம்..
சீக்கிரம் எடேன் கிளி என்றேன்..

ஆஹா....கூறியது புரிந்துவிட்டதோ என்னவோ...
என்னதான் அதில் என்று என் மனம் ஆவலாகயிருக்க...
வந்த படம் குதிரையில் ஓர் அரசன்..

மங்கையிவள் மனதாள..
மன்னன் அவன் வருவான் மணமுடிக்க..
சீர் கொண்டு வருவான் சிங்காரத்தேரிலவன்..

அடடா அன்றிரவு முழுக்க எனக்கேது நித்திரை..?
சித்திரையில் வருவானோ..
சிங்காரவேலனாக வருவானோ..

எப்பொழுது வருவான்..
எப்படி வருவான்..? எத்திசையிலிருந்து வருவான்..
எண்ணி எண்ணியே விடிந்தது பொழுது..

சாஸ்திரம் பார்க்கலையோ கை சாஸ்திரம்..
யாரோ ஒரு அக்கா
கையில் ஒரு புல்லாங்குழலோடு உரத்த குரலில் சொல்ல..

ஆஹா...கிளி சொன்னது சரியா எனக் கேட்டுப்பார்ப்போம்..
கல்வி என்றா, செல்வம் என்றா, ஆயுள் என்றா அப்புறம் என்றா..
அட அதை எல்லாம் விட்டிட்டு என்னை கட்டிக்க யாரு வருவான் அத சொல் என்றேன்..

வடக்கிலிருந்து வருவான்..
வக்கீலாக வருவான்..
வள்ளலாகயிருப்பான், வல்லவனாகவும் இருப்பான் என்றா..

அப்போ கிளி சொன்னது.....???

அன்றிரவும் கெட்டது தூக்கம்..

அம்மாவிடம் பத்திரமாகயிருக்கும்
எனது குறிப்பைக் கேட்டேன்..
எதுக்கோ...? கேள்வியோடு ஒரு பார்வை..

படிச்சு என்னவாகப் போறேன் என்று..
இந்த கொப்பியில இருக்காமே நண்பி சொன்னாள்..
சரி இந்தா கவனமாகத் திருப்பி தா..

ஆஹா....அவ்வளவு நம்பிக்கை என்மீது..
மணவறையில் மாலையிட வரும் மன்னன்தான் யாரோ..?
ஒரு வரிவிடாமல் பக்குவமாய் தேடியது கண்கள்..

பெற்றோர் பார்க்கும் வரன் அமையும்..
உறவினர்களுக்குள் பொருத்தம் உண்டாம்..
திருமண வயது தள்ளிப்போகும்...


ஆஹா....இவர் எழுதியது தான் உண்மையானதோ..
பேர் பெற்றவராச்சே தவறாகக் கணிக்க மாட்டார்..
கனவுகளோடு மிதந்த காலம்..

திடீரென ஆஜரானார்...
கண்களால் மோதிக்கொண்டார்..
அப்பொழுது குடியேறிவிட்டார் இதயத்தில்..

கிளி சொன்னதும்..பொய்.
குறத்தி சொன்னதும்..பொய்..
கிரகங்களைக் கணிச்சு முற்கூட்டியே எழுதிய சாஸ்திரமும் பொய்யாகிவிட்டதே..

எது எது எப்போது நடக்குமோ..
அது அது அப்போது நடக்கும்..
அதுதான் யதார்த்தம்..

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=12294
போட்டோ: அரவிந்தன்(கூகிள் நெட்)

சொர்க்கத்திலிருந்து ஓர் மின்னஞ்சல்..2

முன்னால் காதலனே
கண்முன்னால் கண்ட உன் மடல்..
கண்டு இதயம் டைப்படிக்க
என் விரல்களும் டைப்படிக்கிறது..

நல்ல செய்தி ஒன்று கூறினாய்..
நீ தண்டனை பெறுவதாக..
ஆஹா....அதற்காக நான் செய்த
பிரார்த்தனைகள் வீண் போகவில்லை...

சித்திரகுப்தாவிற்கு பதிவிலிடுகிறேன்..
சித்திரவதைகளைக் கூட்டி
சிறையிலிடும்படி..
சிந்தனை செய்யாதே..தப்பிக்கலாம் என்று..

பெண் என்றால் பேயும் இரங்குமாம்..
பேய் என்றால் நானும் இரங்குவேன்..ஆனால்..
நீயோ...பேயுமில்லை பிசாசுமில்லை..
துரோகி...மன்னிக்கவே முடியாத பாவி நீ..

நிலவு போல நீ வந்தால்..
வாழ்க்கையில் வெளிச்சத்தைக் கண்டிருப்பேன்..
வெளிச்சம் போல வேஷம் போட்டாய்..
விழுந்து நானும் எரிந்தது போதும்..நோ எக்ஸ்கியூஸ்..

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=12234&pid=152316&mode=threaded&start=#entry152316

சொர்க்கத்திலிருந்து ஓர் மின்னஞ்சல்..




அன்பே நலமா..
சொர்க்கத்திற்கு வந்த நான்..
உனக்குச் செய்த துரோகத்தால்
நரகத்திற்கு தள்ளப்படும் நிலையில் தவிக்கிறேன்...

நரக வேதனைகளுக்குப் போகும் முன்..
நான் உனக்கு அனுப்புகிறேன் ஓர் மின்னஞ்சல்..
நடந்ததெல்லாம் மறந்து இதை ஏற்றுவிடு..

என்ன இடையூர்கள் வந்தாலும்..
என்னவள் நீயன்றோ வேறொருத்தியுமில்லை
என்றுனக்குச் சொல்லிவிட்டு..

அன்றவன் தந்த ஐடியா கேட்டு..
அநியாயமாக உன்னைக் கைவிட்டுவிட்டேன்..
அதுமட்டுமா என் கண்ணே..

பொல்லாத பெண் ஆசையில்..
இல்லாததெல்லாம் சொல்லியுன்னை..
இழிவு படுத்திவிட்டேன்..

பொல்லால் அடித்தாலும் பரவாயில்லை..
கல்லால் அடித்தாலும் பரவாயில்லை..
புழுவால் என்னை குளிப்பாட்டி எடுக்கிறார்களே..

எங்கே நான் போய்ச்சொல்ல..
என்னவளே எனக்காக இரங்கி ஒரு மெயிலிடு..
எமன் அண்ணா யோசித்து தண்டனைகளை குறைத்துவிடுவார்.

அடுத்த மின்னஞ்சல் வருமுன்..
ஆருயிரே மன்னித்து மனமிரங்க மாட்டாயா..
மறு பிறப்பு ஒன்றிருந்தால் மனம் வந்து மணமுடிப்பேன் உன்னையன்றோ.

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=12234(பதில் போகும்..)