வியாழன், 26 பிப்ரவரி, 2009

அடுத்த கணம் யாரறிவார்...?



வான் பொழியும்
மழை நீர்
இலையில் விழுந்து
வழிந்தோடும் அதன் நிலையில்

தவிக்கின்ற மனதுகள்
தாகம் தீர்க்க..
கொதிக்கின்ற பூமிச் சூட்டில்..
பாதங்கள் பற்றியெரிய..

பக்கத்தில் தணல்தெறிக்கும்
குண்டுகள் விழ
மண்ணில் விழுந்தான்
அவளை அன்னையாக்க
மழலையாக அவனும்...

அள்ளி அணைக்க
அவளிடமில்லை இரு கரங்கள்..
அழும் குழந்தையாக கதறியழ
அருகே ஓடும் குருதி அதன் பசியாற..

தோண்டும் குழி யாவும்
குருதி குளம் நிரம்பி வழிய
இருட்டான வாழ்வின் ஓட்டத்திற்கு துணையாக
ஆங்காங்கே எரிந்து கொண்டிருக்கிறது..

உயிருள்ள மனிதர்களின்
கூக்குரல் ஒலிகளோடு...
உயிர் மனிதப்பிணங்களின்
அவலத்தின் ஒளியில் பாதை கடக்க...

ஓடிஓடி வாழ்வின் ஓரத்திற்கே ஓடி..
ஒளிந்து கொள்ள இடமுமின்றி..
அழிந்து கொண்டே போகின்றதே..தமிழினம்.
அடுத்த கணம் என்னாகும் என யாரறிவார்..?

ஏதும் அறியாத அப்பாவிகள்..
தினம் உடல்கள் துண்டுகளாகி
கடும் போரில் கடுமையாக வதைக்கப்பட்டு
படும் வேதனைகளுக்கு முடிவேதுமில்லையா...?

--------------------

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10181

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி