வெள்ளி, 28 நவம்பர், 2008

முழு நிலவு



நிலவு மறைந்த நேரம்..
என் முன் முழு நிலவாய்
நீயிருந்தாய்..

இன்று அமாவாசை என்றனர் பலர்..
பெளர்ணமி என்றேன் நானும்..
சிரித்துக்கொண்டார்கள்..

நானும் சிரித்துக்கொண்டேன்..
நீ என் அருகில் இருப்பதை புரிந்து
கொள்ளாத அவர்களை எண்ணி..


**********************************
நிலாவில் உலா வரும் தனிமதி..
கொடுத்து வாழ் கெடுத்து வாழாதே..

கண்ணில் ஓர் நிலவு.




ஆலயத்தினுள் ஓர் அறிவிப்பு
புகைப்படங்கள் எடுப்பது
தவிர்க்கப்பட்டது என்று...

நிலவே நீ இங்கு
வந்த நேரம் முதல்
நான் எடுத்துக்கொண்டிருக்கிறேன்..

என் கண்களால்
உன்னை மட்டும்.
--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

வெள்ளி, 14 நவம்பர், 2008

சினேகிதனே..


மூங்கில்லாக்காட்டில்..
வெறுமையை நிரப்ப வந்த...
சங்கீதமே..
மனம் நேசிக்கும் போதெல்லாம்
மனதோடு பேசும் சுவாசிக்கும்
தென்றலே...
என்ன எழுதினாலும்..
அதில் முதல் விமர்சகராய்
என்னை உற்சாகப்படுத்தும்
உன் வார்த்தைகள்..
தேடாத போதும் தேடி வரும்
உன் நினைவுகள்..
ஓயாத அலையாய்..
ஓடி வரும் உன் அழைப்புகள்..
அத்தனையிலும்
அதிர்ஸ்டசாலியாக நானும்
இப்புவி தனில் உன்னையடைய
என்ன வரம் வேண்டி வந்தேன்..
சினேகிதனே
உன் சினேகம்
சிறகடித்துப்பறக்கிறது.
மீண்டும் உன் சினேகவுறவு நிழல் நாடி.
-----------------------------------------
நிலாவில் உலா வரும் தனிமதி.

http://www.nilafm.com

கொடுத்து வாழ்..
கெடுத்து வாழாதே..

சனி, 8 நவம்பர், 2008

தனிமை


அடிக்கடி நன்றி கூறி
நலமாக இருந்த
நண்பனே....

ஊரார் கூடி
உன்னை
ஊர்த்தொலைவிலுள்ள
இடுகாட்டிற்கு அனுப்பிவைத்தார்..

நாள் தோறும் கிழிக்கப்பட்டு
ஆண்டு முடிவில்
அட்டை மட்டும் தொங்கியிருக்கும்
தினத்தாள் போல்..

நாள் தோறும் உனக்காக உழைத்து..
நான் மட்டும் இன்று
தனிமையாக.



--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

வியாழன், 6 நவம்பர், 2008

மழை



தரையின் வருமை கண்டு...
மேகங்கள் கண்கள் கலங்க..
மின்னல்கள் இடியிடிக்க...
வானம் கண்ணீர் சிந்தி..

வாடிய பயிர்களுக்கு..
வசந்தம் கொடுத்த நண்பன்
அவனே மழை.

புதன், 5 நவம்பர், 2008

புரியவில்லை..



ஓ... மனித சமுதாயமே
ஒரு கணம் எண்ணிப் பார்..


திரளாக மக்கள் திரண்டு
அலை பொங்கும் கடலாக
அள்ளிக் கொடுக்கும் மனிதநேயங்களே..நன்றிகள்.


ஒரு கணம் எண்ணிப் பாருங்களேன்...


இருக்க இடமில்லாபோது..
இருக்கை எதற்கு..?
நித்திரை இல்லாதபோது..
பாயும் படுக்கையும் எதற்கு...?


அடுப்பில்லாத போது..
அரிசியும், பருப்பும் எதற்கு..?
இருப்பிடம் இல்லாத போது..
இலவச மருத்துவம் எதற்கு..?



குடிசையோ கூடாரமோ இல்லாதபோது..
குத்து விளக்கும், மெழுகுதிரியும் எதற்கு..?
செல் வெடித்து செவிடாகிப் போன பின்பு..
செய்திகேட்க வானொலி எதற்கு..?



கண்ணைப் பறிக்கும் கதிர்கள் கண்ணைத் தாக்கியபின்பு...
கண்குளிர பார்க்கும் தொலைக்காட்சி எதற்கு..?
கண்ணி வெடியில் கால் போன பின்பு..
காலுக்குச் செருப்பு எதற்கு...?



மானம் காக்கும் உடை உடுத்த மறைவிடமில்லாதபோது..
மாற்றியுடுக்க உடை எதற்கு...?
கடையும், தெருவும் இல்லாது காட்டிலிருக்க..
கைச்செலவிற்கும், இதர செலவிற்கும் காசெதற்கு...?



பாடசாலையே இல்லாது இருக்கும் போது..
கல்விப்புத்தகமும், ஏட்டுப்புத்தகமும், எழுதுகோலும் எதற்கு...?
தெய்வமே களவு போனபின்பு..
கோயில்களும் கோபுரங்களும் எதற்கு...?



எண்ணிப்பார்...
ஒவ்வொருவரும் இதனை எண்ணிப்பார்..
எண்ணிலடங்கா மக்கள் முகவரிகள் இல்லாதபோது..



இருப்பது இருபது கோடியானாலும் என்ன பலன்..?
இன்றோடு முடிந்து விடுமா இந்த அவலம்..?
இன்னுமொரு தடவை மேடை போட்டு..
துண்டு விரிக்கும் நிலமை வேண்டாம்..



இருப்பதற்கு மீட்டுக்கொடுங்கள் நிரந்தரமாக
நின்மதியாக வாழ வழி செய்யுங்கள்..
இனியும் இந்த அவலம் ஏற்படாதவாறு..
வழி அமைத்துக்கொடுங்கள்..


இருகரம் கூப்பி வேண்டுகிறேன்..
பாதிகப்பட்ட அத்தனை உறவுகளுக்காகவும்
.

----------------------------------------------------

கொடுத்து வாழ் கெடுத்து வாழாதே..
நிலாவில் உலா வரும் தனிமதி.

www.nilafm.com