புதன், 24 பிப்ரவரி, 2010

எங்கே முறையிடுவது..?




எங்கே நான் முறையிடுவது..?
அங்கே என்னை அழைத்துச்செல்லுங்கள்..
இங்கே நடக்கும் கொடுமைகளை
எங்கே நான் சென்று முறையிடுவது..?

சுடும் மணலில் அழும் குழந்தை
படும் வேதனையைப் பார்த்தும் பார்க்காதுமாய்..
குடம் நிறையப் பாலுடன்..
அன்புடன் அமுது படைக்கின்றனராம் ஆண்டவனுக்கு..

நூலில் கற்றது கல்வியறிவு..
தாய் கொடுத்தது மானிட உயிர் விருது..
சேய் செய்யும் கடமைதனை மறந்து..
பொய்யாக ஒரு குற்றம் சுமத்தி..
தாய்,தந்தையர் போகின்றார் தனியிடமாம் முதியோர் இல்லமதுவாம்..

எங்கே போய் நான் முறையிடுவேன்..?

ஊருக்கு ஒரு ஆலயம் இருந்தால்
உனக்கென்ன லாபம்
தனக்குள்ளே ஒரு கேள்வியைக் கேட்டு..
வீதிக்கொரு ஆலயமாக
அவனவன் தேடுகிறான்..லாபம்..


பிழைக்கத் தெரிந்த புத்தி ஜீவிகளுக்கு...
புரியும் படி பாடம் புகட்ட...
எங்கே நான் போய் முறையிடுவேன்..?

பசிக்கு சோறு வேண்டாம்..
படிப்பிற்கு வழிகாட்டென்று..
பாதையோரத்தில் கையை ஏந்தும்..
சிறுவர்களுக்காக ஆலயம் வேண்டாம்..

அறிவை வளர்க்க ஆசானுடன் பாடம் நடத்திட
அமைதியான பாடசாலை ஒன்றை அமைத்திட..
திடம் கொண்ட நல்லவுள்ளங்கள்..
இருக்கும் இடம் கண்டு..
உடன் கூட்டி வர எங்கே நான் போய்முறையிடுவேன்.

நன்மை என தீமை விதைக்கின்றான்..
உண்மையென பொய்யை உரைக்கின்றான்..
வெள்ளை உடையில்..அழுக்கு மனதோடு..
சொல்லில் தேனை வைக்கின்றான்...
உள்ளத்தில் வேம்பாய் கசக்கின்றான்.

எங்கே நான் போய் முறையிடுவேன்...?

--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

கருத்துகள் இல்லை: