ஞாயிறு, 4 மே, 2008

ஒரு மணிநேரம்.



ஒவ்வொரு நாளும் வருகிறாய்


ஒருமணிநேரப் பேச்சால் எனைக் கவர்கிறாய்..


குறைவாகப் பேசுகிறாய்


நிறைவாக என்மனதில் நிலைத்து நிற்கிறாய்..


நீ பிரிந்து செல்லும் நேரங்களில்


என்னை நானும் உணர்ந்து தவிக்கிறேன்..


எதிர்காலத்தில் உன் நலனில்


அக்கறையாய்இருக்க ஆசைப்படுகிறேன்..


இருந்துவிடு இன்னும் அதிகம் என்னோடு..


என்று சொல்லத்தயங்குகிறேன்..


என் உரிமை நீயில்லை


அதனால் நீசெல்ல நான் தடை ஏதும் விதித்திடேன்...


வேறு இடம் வேலைக்கு நான்செல்ல


திரும்ப இங்கு வரமாட்டாயா என ஏங்குகிறாய்..


வருவேன் நான், உனக்காக


என்றாவது ஒருநாள்..திருப்தியோடு


இன்றும் உன் ஒரு மணிநேரத்தை முடித்துக்கொண்டு..நினைத்துப்பார்க்கிறேன்...


உன்னைப்போல் எத்தனை சிறுவர்களை


நித்தமும் கவனமாகப் பார்க்கிறேன்..


ஆனால் நீயோ என்னை அல்லவா அன்பால் பார்க்கிறாய்..


என்னதான் அதிசயம் என்னில் கண்டாய்..


உன் அன்னை கூட சொல்லி மகிழ்கிறாள்..


தூக்கத்திலும் என் பெயரைச்சொல்லி


நீ அழைத்தாய் என்று..


உன்னை நானும் பிரிந்திடுவேனோ என எனக்கும் ஏக்கமாகத்தானிருக்கு...


அன்னையின் கரம் பிடித்து வருகிறாய்..


வந்ததும் என் கரம் பிடித்து மகிழ்கிறாய்..


உடற்பயிற்சி செய்து விட்டு அன்னை உன்னை அழைக்கையில்..


அழுது நீயும், போகாது அடம்பிடிக்கிறாய்..


இறைவனிடம் அப்போது கேட்டேன்...


இந்த ஒரு மணிநேரம் நீளாதோ என்று..


இப்போது கேட்கிறேன்..


தினமும்இந்த ஒரு மணிநேரமாவது உன்னைக்காண வழிவகுக்காதோ.


கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி

ஓடும் மேகங்களே.


ஓடும் மேகங்களே கொஞ்சம்..நில்லு..நில்லு..

பாடும் எந்தன் குரல் ஓய்ந்தென்ன..

சொல்லுச்..சொல்லு..


நீந்தும் கண்களிரண்டும்

நீராகிப்போனதின்மாயம்

என்னகூறு..கூறு..


உன்னைப்போல வெள்ளையுள்ளம்

எங்குமுண்டோ அறிந்து வந்து

சேதி சொல்லுச் சொல்லு..


அழுக்கான ஆயிரம் மனசுகளை

அறிவதெப்படி என்று

பார்த்து வந்து பாடமாய் எடுத்துச்சொல்லு..


நடப்பெதெல்லாம்

நல்லபடியாக நடக்கஏதும்

மார்க்கம் உண்டோ..கூறு..கூறு..


என்னவோ மனசு உன்னை நினைக்குது..

உன்னைப்போல என்றும் வாழ

என்னை நினைக்குது..


என்னைப்போல யாரும்

உன்னையும்..ஓடஓட விரட்டினார்களோ..

உள்ளதைச் சொல்லிவிடு..


மனசொன்றுதான் மனிதனுக்கு துணையிருக்கும்..

மறந்து அதை வாழ்ந்தால்

வேதனைதான் நிறைந்திருக்கும்..


நில்லு நில்லு மேகங்களே..

எந்தன் சோகங்களை சுமந்துநீயும் செல்லு.

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி

என் சுவாசமே..



கண்கள் உன்னைத் தேடி..


மனக்காயங்கள் பல சுமந்து..


வீதியோரத்தே தனிமையாய்..


நின்ற தேர்போல நானும்..


தவிக்கையில்...பசுமையான காலம் போய்..


இலையுதிர் காலமாய்..


இலைகள் உதிர்ந்து..


பனியில் மூழ்கி மரங்கள்..நிற்கையில்..


அடுத்த வசந்ததிற்காக..


கிளைகளும் கொப்புகளும் மட்டும் சுமந்தபடியே..


சுவாசிக்கும் மரங்கள்போலநிழலின்றி நிஜமுடனும்..


உன் வரவை எதிர்பார்த்தபடி ..நானும்..


மனச்சுமைகளை இறக்கிமறுபடியும் வரும் வசந்தம் காண.


எதிர்நோக்கையில்..வீதியோரத்து உயரமான விளக்குகளால்..


பாதிக் கிராமமே ஒளிவீசியது போல..


தூர இருந்து தரும் நிலவொளி நீயாய்..


என்னருகில் இருந்து தினம் வரும்நிலா...


நீதான்என் சுவாசமே.



கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி

மலர்ச்செண்டு.

நீலவானமாய் நானிருக்க..
அதில் சந்திரசூரியனாய் நீ...

முகிழாய் நானிருக்க..
தரைதொடும் மழையாய் நீ..

கரையாய் நானிருக்க..
கரைதொடும் அலையாய் நீ..

மரமாய் நானிருக்க..
மணம் பரப்பும் மலராக நீ..

கல்லாய் நானிருக்க..
சிலைவடிக்கும் சிற்பியாய் நீ..

விழியாய் நானிருக்க..
விழிமூடும் இமைமடலாக நீ..

எழுத்தாக நானிருக்க..
எழுதிவரும் சொல்லாக நீ..

இத்தனையும் இருந்தபின்பும்..
நமக்குள் மலர்செண்டு தந்து வாழ்த்தவேணுமா..?

எமக்குள் பிரிவு வேண்டாம்..
இருவரும் நட்பால் என்றும் ஒருவரே .

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி

அதிகாலை மலர் அது.



அதிகாலை துயிலெழுந்து..


ஆலயமணி ஓசை காதில் கேட்டுக்கொண்டு..


விடிகாலைப் பொழுதின் விபரங்களறிய..


படியிறங்கி கால்பாதம் முற்றத்தை மிதிக்க..


பகல்ச்சூரியன் மெல்லக்கதிரொளி பரப்ப..


பறவைகள் கீச்..கீச் என்று இறகையடித்து கானமிசைக்க..


புதிதாய் நட்டுவச்ச மரங்கள் பொலிவாய் இருக்கின்றதா என்று பார்க்க..


புதினத்தாளும் வீடு நோக்கி வீசி எறிய, அதை எடுத்துபக்குவமாய் பக்கம் மெல்லப்புரட்டிப் படிக்க.....


ஆரம்பமே வெட்டும், கொலையும், மனிதப்பலியும்..ஆங்காங்கே படங்களோடு காட்சி தர..


அப்படியே மடிப்புக்குலையாதவாறு ஒரு ஓரமாய் தொப் என்று போட்டுவிட..


நச்சென்று ஓர் எறும்பு அதில் நசிபட..


திக் என்று என் மனசும் அதை ஞாபகப்படுத்த..


வாளியோடு தண்ணீர்எடுத்து, வாசல்தெளித்து, முற்றம் நனைத்து..


அரிசிமாக்கொண்டு அழகிய கோலம் போட்டு..


வரிசையாய் அணிவகுத்து அகம்மகிழ்ந்து ஓடும்..


எறும்புப் பட்டாளப்படையின் விருந்துண்ண வருகைகண்டு..


எதிரில் நானும் அதை ரசித்தபடி..


எத்தனை இரவுகள் காவல் காத்தாலும்..


சோர்ந்துபோகாது..என்னைக் கண்டவுடன் வாலை ஆட்டும் நன்றியுள்ள நாயாரை கட்டிவிட்டு...


இன்றாவது கோழிக்குஞ்சு முட்டையுடைத்து வந்ததா என்று பார்க்க..


சத்தமின்றி மெல்லக்கூட்டைத்திறந்து எட்டிப்பார்த்து..


ஒரு குஞ்சைக்கண்ட மகிழ்வில், ஓடிச்சென்று எல்லோரையும் கூட்டிவந்து...


மாறிமாறி முண்டியடித்துக்கொண்டு. பட்டுக்குஞ்சை..


இருகைகளாலும் பொத்திப்பிடித்து, தொட்டு மகிழ்ந்த..


இனிய அந்த நாட்கள் இனிவருமா...?


அதுமட்டுமா...


அன்று பூத்த மலர்களை, மெல்ல ஆய்ந்து கூடையில் போட்டு..


அதிகாலை பிராத்தனைக்காக ஆலயதரிசனம் சென்று மலர்கள் கொடுத்து..


அம்மாவிற்கும் திருநீறு கையில் எடுத்துக்கொண்டு...


அன்றைய காலைப்பொழுதில்..


அதிகாலை மலராக நானும்அனைவரோடும்


அன்பாகப்பேசி, ஒன்றாக பாடசாலை சென்று அதிகாலை


மலர் நானாக மலர் போல மகிழந்திருந்தேன்..


பொன்னான அந் நாட்கள், இந்நாளில் நினைத்தாலும் வருமா அதுபோல..


பொல்லாத பிரச்சனையால், சொல்லியழுந்தாலும் தேறாது இந்தமனம்..


பொறுமையோடு பொறுத்திருக்கின்றேன்.


மீண்டும் முற்றம் மிதித்து கோலம் போட.பட்டபாடும்,


அடைந்த மகிழ்வும் நாள்முழுக்க எழுதினாலும்..


யாருக்கும் புரியாது..


அந்த மன நிலை.


யாருமே பக்கத்திலின்றி, பழசையெல்லாம் மனதில் போட்டு பதிவாக்கிறேன் ஏனோ இன்று


கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி


வெள்ளி நினைவுகள்..


புழுதி பறக்க..மணல் பரப்பில் ஓடி விளையாடி..துன்பம் இன்றி இன்பமாகமகிழ்ந்த காலங்கள்...வெய்யில் கொடுமையினால்..வேர்தொழுகி தாகம் தீர்க்க..தென்னை மர இளநீர் பருகியதெவிட்டாத இனிமையான காலங்கள்..பொழுது சாயும் நேரம்...பட்சிகள் அலையலையாய்..பறந்து சென்று தம் இருப்பிடம்..சேர்ந்து கொள்ளும் இன்பமான காட்சிகள்..ஞாயிறு வந்தாலே..நாமெல்லாம் கடற்கரை சென்று...பாட்டுக்குப்பாட்டும்...புதிர் நொடிகளும்..கேட்டுச் சொல்லி பாடித்திரிந்த காலங்கள்...நடந்து செல்லும் பாதையோரங்களில்...அறிந்தவர்கள் ஆசையோடு நலம் விசாரித்து...ஐயாவிடம் அம்மாவிடம் கேட்டதாகச் சொல்லும்...அன்பான விசாரிப்புகள்....அடப் போங்க...ஏசி வண்டியில் கூலாக சீடியில்..பாட்டுக் கேட்டுக்கொண்டு போனாலும்...சொகுசான குளியறையில் சுடுதண்ணீரில்..குளித்தாலும்...அடிடாஸ் டீ சேர்ட்டும்...நைக்கி ஷ்சூவும் போட்டு..ரேபன் சன்கிளாசும் மாட்டி..கலக்கலாக திரிந்தாலும்...கண்டால் ஹாய்..போனால் பாய் சொல்லும் திருநாட்டில்..கண்டதில்லை என் தாய் நாடு தந்தவெள்ளி நினைவலைகளை...இப்பொழுது எல்லாம்..வாய் திறவாமல் அழகாக..தமிழ் நிறையவே பேசுகிறேன்..மெளனமாக நிலாமுற்றத்தை ரசித்தபடி.