சனி, 29 மார்ச், 2008

நாணமா...?


தாமரையே...
உன் முகம்
மலர்ந்து சிவந்தது....
நான் வந்ததாலா...?
நாணத்தாலா...?

--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி

பரிசுப் பேனா...


இன்னும் உன் ஞாபகமாக...
என் கைப்பையினுள்.....
இறந்த உடலை
சுமப்பது போல...
பயனற்றதாய்ப்போன
பேனா..பத்திரமாக.
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி

நீ வருவாய் என...

அன்பைக் கூட்டித்தந்து...
அறிவைப் பெருக்கிதந்து...
கசப்பான நினைவுகளை
கழிக்க கற்றுத்தந்து..

நன்மை தீமையை
பிரிக்கக் காட்டித்தந்து...
இன்று உன் அன்புக்காக
ஏங்கவைத்து...

அறிவை உன்னோடு மட்டும்
அடகு வைத்து..
உன் நினைவுகளை மட்டும்..
கழிக்காது வளர்த்து..

உன்னையும் என்னையும்..
இன்று வரை
பிரிக்காது காத்து நின்று...
இன்றும் வருவாய் என..

தண்ணீரில் அழும்
மீனாக யாருக்கும் புரியாமல்..
கண்ணீர் விடுவதும்...
கண்ணீர் விடுவதை அறியாது...

இரை கிடைத்ததாய்..
காலைச்சுற்றும் மீனாக...
இல்லாத ஒன்றுக்காய்..
பொல்லாத நினைவுகளை
சேர்த்து வைத்து

கவலையில்முகம் புதைக்கிறேன்...
நீ வருவாய் என...

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி