ஞாயிறு, 14 டிசம்பர், 2008

கண்ணில் ஓர் ஈரம்...



மின்சாரம் வரமுதல்..
முற்காலத்து மக்களின்
பாவனைப்பொருட்களை...

வரிசைப்படுத்தி..
நிழற் படங்களாக
கண்காட்சி நிலையத்தில்..

ஆச்சரியத்தோடு
விழிகளை உயர்த்திப் பார்க்கும்
வேற்று மொழி மக்களோடு

நானும் என் மகனுக்கு..
விளக்கி காட்டிக்கொண்டு வந்தேன்..
மிக்ஸி, கிரைண்டர் வந்ததால்
அழிந்து போகும்..

உலக்கை, உரல், அம்மி,
அரிக்கன் லாம்பு, ஆட்டுக்கல்..
இப்படியே அடுக்கடுக்காய்...

கண்ணில் ஓர் ஈரம்..
நெஞ்சில் ஓர் அச்சம்..
பல ஆண்டுகள் செல்ல..

தமிழ் மொழியும்..
பண்டைக்கால மொழியாம்
என மியூசியத்தில்தான் பார்க்கவேண்டிவருமோ என..
என் கண்ணில் ஓர் ஈரத்துளி.

_______________________________

கொடுத்து வாழ்..

கெடுத்து வாழாதே...


நிலாவில் உலா வரும் தனிமதி..