திங்கள், 26 ஏப்ரல், 2010

புத்திசாலி..



சில கால பழக்கம்தான்..
பல கால நண்பர் போல்
கலகலவென கதைப்பார்..

ஒரு நாள் கண்டோம்..
பஸ்சிற்காக காத்திருந்தார்..
வைத்திருந்த காருக்கு என்னாச்சு என்று கேட்டோம்..

பெற்றோல் விற்கிற விலையில
எதுக்கு வீண் செலவு அண்ணே என்றார்..
அதுவும் சரிதான்..வாங்கோ கொண்டே விடுகிறோம் என்றோம்..

இன்னுமொரு நாள்..

அவர் செல்போனுக்கு போன் எடுத்தோம்..
சேவையில் இல்லை என்றே சொன்னது..
வீட்டு நம்பருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது..

எதுக்கண்ணே வீண் செலவு..
ஒழுங்கான வேலையும் கிடைக்கல்ல என்றார்..
அடடா அதுவும் சரிதான் என்றோம்..

சில நாட்களின் பின்பு..

வீட்டிற்குச் சென்றோம்..
கணனியையும் காணவில்லை,
அழகான மீன் தொட்டியையும் காணவில்லை.

என்னாச்சு என்றோம்..
பிள்ளைகளால பெரிய தொல்லை...
அதனால விலைக்கு கொடுத்திட்டேன் என்றார்..

மெளனமாக சிரித்துக்கொண்டு இருந்தோம்..
ஆங்காங்கே கார்ட்போர்ட் பெட்டிகள்
இருக்கக் கண்டோம்..

அட எதுக்கப்பா இதெல்லாம்..?
வீ்ட்டுக்காரன் எழும்பச் சொல்லிட்டாண்ணா..
வேற வீடு பார்க்கிறேன் என்றார்..

அடப்பாவமே..
நாங்களும் கணனியில போட்டிருப்பாங்க.
வீடு பார்க்கிறோம் என்றோம்..

அமைதியாக
நித்தியானந்தா சுவாமி போல சிரித்தார்..
அப்புறம் என்ன சந்திப்போம் என்றோம்..

இருந்தா கண்டுக்குங்க..என்றார்..
அட என்னையா மனுசன் இவன்..
இப்படிச் சொல்லிட்டானே..என்று
என் கணவர் தத்துவ வரிகளில் ஆறுதல் சொன்னார்..

நம்பிக்கைதானே மனுஷ வாழ்வு
கைவிடாதீங்க நம்பிக்கையோடு வாழுங்க என்றார்..
அப்பவும் நித்தியானந்தா போல ஒரு தலையை சரித்து ஒரு சிரிப்பு..

சில நாட்கள் கழித்து..

நல்ல தொரு வீடு கிடைச்சிருக்கு
என்று சொல்ல தொலைபேசி எடுத்தபோது..
யாரும் பதில் இல்லை..அடப்பாவமே

அவர் குழந்தைகளுக்குத்தான் ஏதும் சுகயீனமோ..
பதறியபடி வீடுதேடிச் சென்றபோது..
வீட்டுச் சொந்தக்காரன் சொன்னான்..

வாடகைப்பணமும் தராமல்
ஆள் எஸ்கேப் என்று..
ஐயோ அப்போ நாங்க கொடுத்த பணம்..???


(இது வெறும் கற்பனையல்ல முற்றிலும் உண்மை! உண்மை! உண்மை!!)
--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=14666

ஏனிந்தக் கொடுமை...?



பாவம் இந்தக் குருவிகள்..
பகலிரவாக காத்துவந்தன தம் குஞ்சுகளை..
பகலவன் வரும் நேரம் பறந்து பறந்து..
பசிக்கு உணவு தேடி களைத்து வந்து இளைப்பாறும் மரங்களை..
ஊருக்கு இடைஞ்சலென..
ஊரார் சேர்ந்து ஒட்ட வெட்ட..
ஊசிற்தூற்றல் ஒருபுறம் பெய்ய..
ஊமையாய் கதறிக் கதறி குருவிகள்..அழுதன

இத்தனை நாள் நிழலுக்காக
ஒதுங்கிய மக்கள் மறந்தன நன்றி..
இதுநாள் வரை முதியோரின் சங்கமாகயிருந்த
அந்த மரம் சரிந்து தரையிலே விழுந்தன...
அங்கே குஞ்சுகளும் அதற்குள் நசுங்கிப் போயின..
அந்நிலை கண்டு என் மனம் கலங்கின..

இந்த மரம் இல்லையென்றால் நாம்
இதுபோல் இன்னுமொரு மரத்தை நாடிச்சென்றிடலாம்..
இத்தனை நாட்கள் அடைகாத்து குஞ்சுகளைக் கண்ட..
இச்சிறிய பறவைகளின் நிலையை எண்ணி மனம் அழுகின்றது..

காதல் வே(வி)ஷம்.


அடிப்பாவி..
என் கல்லறைக்கு
கண்ணீர் பூக்களால்
அலங்காரம் செய்கின்றாயே இப்பொழுது..

அப்பொழுதே எம் காதலுக்கு...
மலர்களால் மாலை சூடியிருந்தால்..
காதல் பூக்களால் காலமெல்லாம் வாழ்ந்திருப்போம்..
கண்கெட்ட பின்பே சூரிய நமஸ்காரம் எதுக்கடி..?


மனதை சிதைக்கத் தெரிந்த மாதுவே...
இந்த மலர்களையாவது மரத்தோடு விட்டுவிடு...
மலரஞ்சலி எதுவும் வேண்டாம்..அவைகளைாவது
ஒரு நாளாவது உயிருடன் வாழ்ந்துவிட்டுப்போகட்டும்.

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=14414

நீயே தெய்வம்.



இருட்டு வாழ்வில்..
வெளிச்சமாய் வாழ்ந்தேன்..
தாயின் கருவறையில்..

(வெளி) வெளிச்சத்திற்கு வந்தும்..
சில குருட்டு ஜனங்களின்..
இருட்டு மனங்களைப் பார்த்து..
மனம் அழுது வடிக்கின்றது..

தாயே உன் கருவறை போல்..
பாதுகாப்பான அறையேதுமில்லை..
பாரினில் உன் போன்ற தெய்வம் வேறெதுவுமில்லை.
--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி