ஞாயிறு, 24 அக்டோபர், 2010

ஜீவ காருண்யம்.



என்னை சாய்த்து
தன்னை வளர்த்து - ஈற்றில்
மண்ணில் நீக்க
என்னில் ஏற்றுவதேனோ..

உன்னை நீ அறிந்திடின்
என்னையும் நீ அறிந்திடுவாய்..
மண்ணை சரண் அடைந்திடின்- என்
கண்ணையும் நீ துடைப்பாய்..

மண்ணோடு நீ உக்கினால்..
மரமாவது வாழும்- என்னை
மண்ணாக்கினால் மனிதா
மண்கூடச் சோரும்.

வாசல் தேடி வரும் வசந்தம்..



Posted Image



நீண்ட தொலைவில்
நீயிருந்து அழகாக பேனா பிடித்து..
நீ நினைப்பதை எழுதி..

அருகில் இருந்து அணைப்பது
போல் இடையிடையே
அன்பாக பல பாடல்கள்..சேர்த்து..

பக்கம் பக்கமாக கண்ணீருடன்..
பாசக் கதைகள் பல பேசி..வரும்
அன்பு மடலை..

சட்டைப் பைக்குள்..
இஷ்டம் போல் கொண்டு திரிவேன்..
இரவுப் பொழுதிலும் விடிய விடிய
திரும்பத் திரும்ப படித்துக்கொண்டு இருப்பேன்..

கையிலெடுத்து முத்தம் பலகொடுப்பேன்..
நெஞ்சோடு அணைத்திருந்து..
கண்ணில் நீர் வழிய..
நீ அனுப்பும் மறு மடலுக்காக காத்திருப்பேன்..

பளிங்கு போல் உன் கையினால்..
மெழுகு போல் வார்த்தைகளை சேர்த்து..
உருகி உருகி முத்து முத்தாக
எழுதும் எழுத்துக்களே என் நினைவில்
இன்றும் என்றும் நிலையாய் இனிக்கிறது.

விதம் விதமான
கையடக்க செல்பேசி
பல நுட்பத்திறன் கொண்ட கணனி

இத்தனையிலும் நாளாந்தம் வரும்..
அன்பு மடல்கள்
என்றும் இனித்ததில்லை எனக்கு.

கலைவாணி அருள் தருவாயே..




Posted Image


கலைகளுக்கெல்லாம்
அதிபதியாக விளங்கிடும்..
அருள்மிகு தேவி சரஸ்வதிதாயே
நாமகள் உன்னையே நாவாறப் பாடவந்தேனே..


நான்கற்றதன் கல்வியறிவை..
நற்றமிழில் சொற்கொண்டு
நாமகள் உனக்கோர்..துதியொன்றை
சுவை பட தர வரம் தருவாயே..

சபை நடுவே
சரஸ்வதி துதியாற்ற..
வாழ்த்திப் பாராட்டி
வழியமைத்துவிடு கலைவாணிதாயே..

வெண்ணிற ஆடையில்..
வெண்டாமரை அமர்வில்..
கண்ணிரு மணியில்..
விண்தாரகைகள் ஒளியில்..

அருகில் அன்னமும்
முன்னங்கைகளிலே வீணையும்..
பின்னிரு கரங்களில் ஓலைச்சுவடியும்...ஜெபமலையும்..
கொண்டதோர் கோலமும்..கொண்ட நாயகியே..

ஆய கலைகள் அறுபத்தினாங்கிற்கும்..
ஆதி பராஷக்திகொண்ட..
அகிலமெல்லாம் போற்றும் ஆகமச் செல்வி தாயே..
அருள் மிகு ஞானசரஸ்வதி நீயே..

கல்லாதார் இவ்வுலகில்
இல்லாதிருக்க
எல்லாச் செல்வங்களும்..
அளித்திட வா கலைமகளே..

கள்ளமில்லா உள்ளம் பெறும் கல்வியை
எல்லையில்லா வானம் போல்..பரந்து
ஏழை எளியவர்க்கும் எடுத்துச் செல்ல
எழுத்தாற்றலை எல்லோருக்கும் அருளிப்பாயா தேவி..

மயில் வாகனத்தை உனதாக்கிக்கொண்டு...
மக்களெல்லாம் உணரும் வகையில்..
மயிலிறகு போல் கல்வியறிவை விரித்து..
மறுபடியும் இறகை மடிக்கும் அடக்கத்தை உணர்த்திய மாதேவி நீயே..

ஆடையிலும், அன்னத்திலும் காட்டியருளிய
அப்பழுக்கற்ற தூய்மை
அனைவரும் கடைப்பிடிக்க
ஆசிகள் வழங்கி அரவணைப்பாய் தாயே.

அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி பகவன் முதற்றே உலகு.


(மொன்றியல் துர்க்கா பதி தமிழ்ப் பாடசாலையில் நடைபெறவிருக்கும் வாணிவிழாவிற்காக எழுதிக்கொடுத்திருந்தேன்.)

உன்னிடம்


Posted ImagePosted Image
Posted Image


சில நிமிட உரையாடல்..
சில நிமிட எழுத்துக்கள்....
சில நிமிட வாழ்த்துக்கள்..
சில நிமிட பதிவுப்பார்வைகள்..
சில நிமிட கலந்தாலோசனைகள்..

இத்தனையிலும்
பல நாள் சிநேகம் போல்..
என்னை ஏன் உனக்குப்பிடித்திருக்கிறது..?

தொலை தூரத்தில் நீயிருந்தும்..
விரல் தொட்டு எழுதும் எழுத்துக்களுக்கு
தூரம் அதிகமில்லை என்பதாலா..?

யாரிடம் நான் கேட்பது..?
உன்னிடமே கேட்கிறேன்...
உள்ளதைச் சொல்லிவிடு..

சர்வதேச தமிழ் வானொலியின் வசந்த விழா 2010.



Posted Image

ன்புள்ளங்களின் இதயங்களின் ஈரம்..
றிவிப்பாளர்களை கண்டே மனமகிழும்..

யிரம் கண்கள் ஒன்றாகக் காணச்செய்யும்..
டலுடன் பாடல்களும் அரங்கேறச்செய்யும்..

துவரை ஏங்கிய நாட்களின் தாகம் தீரும்..
னிமையான முத்தமிழ் கானங்கள் காதில் வந்தேன்பாயும்..

ரொன்பதாண்டுகள் நிறைவின் காற்றலை கீதங்கள் கதை பல சொல்லும்..
ழம் தமிழா் நெஞ்சங்கொண்ட ஏக்கமிடரும் சற்றே ஆறும்..

லகெங்கும் அலையலையாய் வலம் வரும்..
ண்மை அன்பை என்றும் அது தரும்..

மை நெஞ்சின் ஓசைகளையும் வாங்கிக்கொள்ளும்..
ர் மக்களுக்காய் தன் சேவையை நலனே செய்யும்..

த்தனை இடர்கள் நம்மைச் சுற்றிவந்தபோதிலும்..
ட்டுத்திக்கும் நல்மருந்தாய் நமக்கின்பம் தந்திடும்..

ணி கொண்டு நாம் ஏறாத போதும்...
லம் கொண்ட வாசனையாய் எம்மை உயர உயர பறக்கச்செய்யும்..

யம் எம்மை விட்டுப்போக்கும்..
ப்பசியில் ஒன்றாய் ஐக்கியமாக்கும்..

வ்வொரு மனங்களிலும் ஏக்கம் தீர்ந்துகொள்ளும்..
ருமனப்பாடாய் காற்றலை கதைகள் பேசச்செய்யும்..

ங்கித் தமிழர் குரல் எழுப்பி அரங்கம் நிறையச் செய்யும்..
யாமை இன்பத் தமிழ் வானொலி தரும் சுவை அறியச்செய்யும்..

ஒளவியம்(பொறாமை) அகற்றி நல்லறிவை வளர்க்கச்செய்யும்..
ஒளடதம்(மருந்து) போல் வாழ்நாளில் வந்தெம்மை ஆற்றும்..அது வசந்த விழாவில் நிறைவேறும்..

நன்றியுடன் தனிமதி..Posted Image

(வருகின்ற ஐப்பசி 2 ல் நடைபெறவிருக்கும் ஐ.டி.ஆர் வானொலியின் வசந்தவிழாவிற்காக எழுதியிருந்தேன்.)

நீ வரும் திசை நோக்கி..




ஊரெல்லாம் தூங்கையிலே
உறவெல்லாம் கூடிக் குதூகழிக்கையிலே...
நாளெல்லாம் வரும் அருந்ததி நட்சத்திரம் போல்..
நான் மட்டும் உன் நினைவில் விழித்திருந்து
மகிழ்வேதுமில்லாமல், தூக்கமும் இல்லாமல்..
பசி துறந்து, எனை மறந்து பார்த்திருக்கின்றேன்..
நீ வரும் திசை நோக்கி.

பெண்ணாகப் பிறந்தது பாவமே..





என் அம்மா தாயே
ஏனம்மா என்னை
பெண்ணாய் பெற்றாய்..

மகளாய் நானுக்குப் பிறந்தாலும்...
பிறர் வீட்டு மருமகளாய்
ஏன் அனுப்பிவைத்தாய்..?

தட்டானிடம் கொடுத்து...
தங்கத்தால் அணிகலன்செய்து..
தட்டிக்கவி பாடி..
தங்கமே அங்கு நீ
தங்குமிடமே என்றனுப்பிவைத்தாய்..

வந்த நாள் சில நாளில்..
வகுமைக்கு ஏது குறைச்சல்..
வயிரவமின்றி வாழ்க்கை சென்றதம்மா..

பொட்டு வைத்த பூ முகத்தை
தொட்டுப்பார்த்து ரசித்த என் கணவர்..
கட்டுக்கதைகள் சொல்லுவதை நீயறிவாயோ..

தங்கநகை அணியாமல்..
தவறியும் இருக்கவிடமாட்டாமலிருந்த
என் கணவர்
தரித்திரம் பிடிச்சவளுக்கு தங்க நகை
உனக்கொரு கேடா என்கிறாரேயம்மா..

அள்ளி முடித்த கூந்தலோடு இருந்தாலும்..
அழகாய் தலையிழுத்து பூவும் பொட்டும் வைத்து
வா என்ற என் கணவர்..
யாருக்காகவடி இந்த அலங்காரம் எல்லாம் என
யாவரும் பார்க்க யாமசரிதன் போல் சொல்லுகிறாரம்மா..

அடுக்கடுக்காய் நீ தந்த சேலைகள் எல்லாம்..
அலுமாரியில் வைத்தே அழகு பார்க்கிறேனம்மா..
அவர் முன்னிலையில் நான் அழகற்றுப் போனேனம்மா..

பால் காரன் வந்தாலும்..
தபால் காரன் வந்தாலும்..
நான் தலை காட்டக்கூடாதாமம்மா..

நோய் வந்து படுத்தாலும்..
நொட்டைச் சொல் சொல்லி..
கட்டையால் அடிக்கிறாரம்மா..

பெற்றவர்கள் மானம் காக்க..
பெரும்பாலும் பொறுத்துக்கொண்டே வாழ்வேனம்மா..
பெண்ணாய்ப் பிறந்தது பாவமம்மா..

சுமைகள்...





விடுமுறையில் சென்று..
திரும்பி வரும்..என்னை
வாசல் வரை வரவேற்க
பல உறவுகள் காத்திருக்க..

சுமந்து வந்த பொதிகளை..
வாங்கிக் கொண்டு...
என் சுமை குறைந்ததாக..
எண்ணிக் கொள்ளும்..
சுற்றத்தாருக்கும்...

எங்கே புரியப்போகின்றது..
நான் சுமந்து கொண்டு
இருப்பது மறக்கமுடியாத
உன் நினைவுகளை
என் இதயச்சுமைகளாக..

கண்ணீரின் பயணம்.


Posted Image

வழியும் கண்ணீர்
என் விழியைப்பார்த்து(க்) கேட்டது...

எதற்காக என்னை
மண்ணில் விழச்செய்கிறாய் (என்று.)

எண்ணிலடங்கா சோகம்
என்னை வாட்டும் போது..
என்னையறியுமறியாமல்..
என் விழிகள் உன்னை அனுப்பிவைக்கின்றனவே...

ஓ......விழியே..
கண்ணீரின் நிலையைப்பார்...
நிலைத்தது எதுவுமில்லை..
வரும் துன்பம்
கரைந்தோடி...
நீர் நிறைந்தோடி...
நிலையில்லா வாழ்வில்..
மண்ணோடு நீராகி
மறுபடியும் மண்ணில் காணாத
கண்ணீர் மறைந்த மாயத்தைப் பார்...
வரும் துன்பங்களை..
கண்ணீர் போல் துரத்திவிடு...
கவலைகளை துடைத்துவிடு..
காலம் உனக்காக காத்திருக்கிறது..
கண்ணீருக்கு விடை கொடு..

மனமுடைந்த போது...
மனதாறுதலாக கண்ணீரின்
கதை தந்து
சிதைந்த என்னுள்ளத்தை..
சிறப்பாக வாழ வழிதந்தாய்..
ஓ......கண்ணீரே..
விழியிரண்டும் ஒளிபெறட்டும்
வலியிருக்கும் வாழ்வில் வழிபிறக்கட்டும்.

ஆத்ம திருப்தி..

Posted Image
----------------------------------------------------------------------------------------------------------------------

கடந்து வந்த 30 நாட்களில்..
காலை மாலை
கடவுள் வணக்கத்தைத்தவிர
வேறெந்த சிந்தனையுமில்லை..

பாலிருக்கும், பழமிருக்கும்..
பல வகையான உணவுகள் இருக்கும்..
பசிக்கு சாப்பிட்டதில்லை..

விதம்விதமான பாணங்கள்..
விருப்பம் போல் பருகக் கிடைக்கும்..ஆனால்..
விரும்பியும் குடித்ததுமில்லை..

தாகம் வந்து
தலையைச்சுற்றினாலும்..
தவறிக்கூட எச்சிலும் விழுங்கியதில்லை..


அலங்காரமாக ஆடையணிந்து
ஆடம்பரமாக வாழ்வமைத்து வாழ..
அதிகம் பேசி நாளைக் கழித்ததுமில்லை..


எல்லா வசதியிருந்தும்..
அல்லாவை நினைத்து
இல்லாத ஏழைகளுக்கு
இனிதே தானம் வழங்கி..
எல்லாக் குறைகளையும்..
மன்னித்து மகிழ்வோடிருக்கும் நோன்பு..

இருப்பதைக்கொடுத்து..
இல்லாததைப் பெற்று...
இருளகற்றி..ஒளிபெற்று
இன்பமுடன் வாழ வழியமைக்கும் திருநாள்..

இறை பார்க்க..
மறை சொன்ன
பிறை பார்த்து..
கறை நீங்க
கடைப்பிக்கும் நோன்பு..

ஒரு சொல் சொல்லாயோ



கடந்த கால எண்ணங்கள்
என்னைக் கடந்து போகின்ற
ஒவ்வாரு நிமிடத்திலும்..

ஓயாது கரையைத் தீண்டும்..
தொடர் அலையாய்..
விடாது தொடர்ந்து வருகிறது
உன் உருவம்..

ஒரு பக்கம் சுற்றும்
காத்தாடி போல்
அன்று என் நினைவில்
உனக்காகக் காத்திருந்தேன்..
நீ வரவில்லை..

இன்று..

உதிர்ந்து விழுகின்ற
பூக்களைப் போல்..
சிதைந்து அழுகின்றது..என் நெஞ்சம்..

உதிராத பூவும்..
மறையாத ஞாயிறும்..
தேயாத திங்களும்
எங்காவது இருந்தால்..

எனக்காக
ஒரு சொல் சொல்லிவிடு...
அவற்றைப் பார்த்து
அதுபோல மகிழ்வாக
வாழக் கற்றுக்கொள்கிறேன்.

_______________________________
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

பார்வை..



Posted Image

நான் எழுதுகிற ஒவ்வொரு
எழுத்தையும் பார்ப்பதற்காக
நீ ஓடோடி வருகிறாய்...

உன்னைப் பார்ப்பதற்காகவே..
நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்..
உனக்கும் தெரியாமலே..

____________________________
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி



நீளமான நேரங்கள்.




நீயூம் நானும் ஒன்றாகயிருந்தபோது...
பகல் பொழுது கூட
கண்ணிமைக்கும் தூரத்தில்..
கண் சிமிட்டிக்கொண்டிருந்தது...

இது இன்னும் நீளாதா என
ஏங்கும் ஒவ்வாரு பொழுதிலும்..
இருளும் வந்து
இரு புருவங்களின் இடைவெளியாய்..
இருந்து விட்டுச் சென்றது...

நீளும் பொழுதுக்காக..
நீயூம் நீங்காதிருக்க வேண்டி
நீண்ட தவம் புரிந்து
வரம் ஒன்று நான் வாங்கி வர..

கூடு விட்டுப் போன ஆவியாய்...
என்னை விட்டு சென்றாய் நீயூம் பாவியாய்..




கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி


"மதியின் மனவானில்"
Posted Image

வருவாயா





தேடும் விழிகளுக்கு..
காட்சியாய் நீ வருவாயா..
பாடும் பாடலுக்கு...
மொழியாய் நீ வருவாயா..

வளைந்து கொடுக்கும்
நாணலைப் போல்..
அங்கும் இங்கும் அலைந்து
தேடிக்கொண்டிருக்கிறேன் நான்..

அழுத விழிகளில்..
வழிந்தோடும் கண்ணீரில்..
வரிவரியாக உன் பெயரை..
உரக்கச்சொல்லுகிறது என் இதயம்..

இன்னும் ஏன் மெளனம்..
இதுவரை பொறுத்தது போதும்..
இரும்பல்ல என் இதயம்..
இருளுக்குப் பின் ஒளி என்றால்
அது உன் வருகையாக இருக்கட்டும்.

வருவாயா..

________________
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி



பாவம் இவர்கள்..



ஏதோ ஒரு படம் தேட..
என் கண்ணில் பட்ட இந்தக் காட்சி..
கண்டதும் ஒரு கனம்..
நெகிழ்ந்தது நெஞ்சம்..


போர்த்துக்கொள்ள போர்வையின்றி..
உடுத்திக் கொள்ள ஆடையின்றி..
அள்ளி அணைக்க யாருமின்றி..
யாரோ விதைத்த விதை..
வீதியில் நாதியற்றுக் கிடக்கின்றதே..


நிஜமாக
பார்த்தால் பார்க்காமல் போகாதீர்கள்..
பராமரிக்கும் இடமிருந்தால்...
பக்குவமாய் அங்கே சேர்த்துவிடுங்கள்..

ஆலயங்கள் இனித்தேவையில்லை..
அதிகமாகவே இருக்கின்றது..
அனாதையாக அலையும்..
அபலைகளுக்கும், ஏழைகளுக்கும்..
கட்டிடுங்கள் பாதுகாப்பான இல்லம்.
______________________
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

அவனும் அவளும்..

(அவள்)
இங்க பாருங்க
நீங்க எத்தனை தடவை கேட்டாலும்..
எத்தனை மெயில்,
எத்தனை எஸ்எம்எஸ், இன்னும் எத்தனை எத்தனை
எத்தனை தடவை அனுப்பினாலும்..
என்னால உங்கள காதலிக்க முடியல்ல..

காதல் கேட்டு வாங்குவதில்ல...
மனசும் மனசும் ஒன்றுபட்டு
புரிந்து கொண்டு வரவேணும்..

(அவன்)
ப்ளீஸ்....சொல்லுறதைக்கேள்..
நீயில்லாத..
என்னுயிர்..இனி எதற்கு..
நான் சாவதைத் தவிர வேறு வழியில்லை..

(அவள்)
முதல்ல அதைச் செய்..

பயங்கர இசையின் முடிவின் பின்..
அவனும், அவளும்..
ஒருவரையொருவர் புன்னகைத்து..
இன்றைக்கு டப்பிங் இவ்வளவுதானாம்..
கூறியே விடைபெற்றுச் சென்றனர்.. smile.gif
_________________________
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி


"மதியின் மனவானில்"


http://www.thamilworld.com/forum/index.php?showtopic=15033

சில நிமிடங்களுக்கு முன்..



காற்றில் கலகல வென்று சிரிக்கும்..
பசுமை நிறைந்த மரத்தின் இலைகள்..
பட பட வென்று இறகையடித்து..
தம் குஞ்சுகளுக்கு உணவு ஊட்டும்
பட்சிகள்..

அமைதியாகயிருந்து
பசுமை நினைவுகளை
பேசிக்கொள்ளும் தம்பதிகள்..

வெய்யிலில் நடந்து வந்த களைப்பில்..
தன்னை மறந்து இளைப்பாறும்
வயதான வியாபாரி..

இத்தனையும் அந்த மரம்..
வெட்டப்படும் முன்.. sad.gif

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி


"மதியின் மனவானில்"

நிஜமா அல்ல நிழலா..???


இது என்ன நிஜமா அல்ல நிழலா..
உயர உயரப் பறக்கும் பட்டம் போல..
இரு நூலில் ஆடும்
ஊஞ்சல் இங்கேயுமுண்டு...

கலகம் ஏதுமில்லை களிப்பூட்டும்..
தளமுண்டு..
நிஜமா இது நிழலா...?

வறியோரின் வாசலில்..
வசந்தமுமுண்டு..
நிழலா அல்ல நிஜமா...?

கோடிக்கணக்கில் துன்பமுண்டு..
ஆடித் தீர்திடலாம்...வா இங்கு...
நிஜமா இங்கு நிழலா..?

ஓலைக் குடிசையிலும்...
ஒற்றுமையாய் நாமுங்கு...
நிஜமா இது அல்ல நிழலா..?

வாழப்போகும் பைங்கிளிகள்..
ஆடித்திரிவது காண்கீர்..
நிஜமா அல்ல நிழலா...?

ஏழைக் குடிசையிலும்..அவர் தம் சோக கீதம்..
எட்டுத் திக்கு கேட்டினும்..
ஏன் என்று கேட்பாரின்றி வாழும் இந்த...
சமூகம் வாழ்வது நிஜமா அல்லது நிழலா.....?

செல்வக் குழந்தைகளின்
சிரிப்பில் ஆதவன் வந்தமர்ந்து..
ஆனந்தமாய் சிரிக்கின்றான்..

உரைத்திடுவீர் நீவீர்..
பாதியுகம் அழிந்திட்டாலும்..
பார் புகழும் சிறுவர்கள்..
நாமன்றோ......நிஜமா......அல்ல நிழலா...


கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி


"மதியின் மனவானில்"


Posted Image

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=14773