திங்கள், 27 அக்டோபர், 2008

தீபாவலி




இங்கும் கேட்கின்றது..
தீபாவளியின் சர வெடிகள்..
வருடத்தில் ஒரு நாளில் இல்லை..

வருடம் முழுக்க
விரும்பாத வெடிகளாய்..
விரக்தி வாழ்வின் வெளிச்சங்களாய்..


எரியும் நெருப்பில்..
எழமுடியாத வடுக்களில்..
கண்கள் எரிந்து கண்ணீரால் அனைந்து..


இதயம் படபடக்க..
விழிகள் விழித்திருக்க..
இரவென்ன பகலென்ன...

காதைப் பிளக்கும்..
கண்ணைப் பறிக்கும்..
உயிரைக் கொல்லும் தீயின் வலி..என் தீபாவலி.

--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி


www.nilafm.com

ஈழம் சுடுகின்றது.


ஈழம் சுடுகின்றது..
சுடு காடாய் பிணங்கள் குவிகின்றது..
மரண ஓலங்கள் தினமும் அங்கே
மார்பில் அடித்துக்கதறுகின்றது..

எறிகணைக் குண்டுகளால்
எம் இனத்தை எரித்து அழிக்கிறான் ஏதலன்.
ஏன் என்று கேட்போருக்கும்..
எதுவித பதிலும் இன்றி எதிர்கிறான்..

இருந்தும் இருந்துவிடமுடியுமா ..
இயலுமானவரை காத்திடுவோம்..
எம்மினம் அழிவதை தடுத்திடுவோம்..
புரட்சிப்பூக்களுக்கு பூட்டு இல்லை..

புரியும் படி எடுத்துரைப்போம்..
புலம் பெயர்ந்து நாம் வாழ்ந்தாலும்..
எம்மினம் அழிவதை..
தடுத்திடுவோம்...

திரண்டு எழுவோம்..
திக்கெங்கும் குரலெழுப்புவோம்..
தினம் பிணம் இல்லாது..
மனம் நொந்திருக்கும் எம் மக்களை காத்திடுவோம்...



கொட்டும் மழையினுள்ளும்..
கொடிய விஷப் பாம்புகள் மத்தியிலும்..
நட்ட நடு நிசியிலும்..
நாளும் வெந்து துடித்து பதறி வாழ்ந்து..
மடிகின்றதே எம்மினம்..


வெட்ட வெளி சிறைச்சாலையில்..
வெறுமையில் வாழும் மக்களுக்கு..
மனம் மிரங்கி நாமும்
ஏதும் செய்திடுவோம்..


நமக்கு என்ன குறை
பார்ப்பதற்கு தொலைக்காட்சி..
படிப்பதற்கு கணனி..
உலா வர ஊர்தி..
மாற்றி உடுக்க உடை
உறங்க ஓர் உறையுள்..


இதில் ஒன்றாவது எம் மக்கள்
அநுபவிக்கிறார்களா..?
அல்லும் பகலும் இன்னல்களைத்தாங்கி.
சுடும் நிலத்தில்..
வெந்து வெடித்து வேதனையில்
துயிலெழுந்து துடிக்கின்றார்கள்..


ஆகாயத்தில் காகம் பறந்தாலும்..
அச்சப்பட்டு ஓடி ஒளிகின்றார்கள்..
பள்ளிக்கூடம் சென்றாலும்..
மனம் பக்குவமாய் ஒரு நிலையில் இல்லை..

பதுங்குளியில் வெள்ளைச்சிறார்கள்..
உயிர் காப்பாற்ற உயிரை கையில்
பிடித்துக்கொண்டு கதறி அழும் காட்சி
பார்ப்பவர்கள் எவராகயிருந்தாலும் கண்ணீரை
வரவழைக்கின்றதே..

வளமாக வாழ வழி தேவையில்லை..
நலமாக வாழ வழி அமைத்திடுவோம்..
கதறும் எம்மினத்தை காப்பாற்ற
வழி செய்திடுவோம்..
சுடும் ஈழத்தை எம் உணர்வுகளால்
காத்திடுவோம்...
------------------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

வியாழன், 16 அக்டோபர், 2008

யாருமில்லா ஊரில்...



சுதந்திரமில்லா நாட்டில்
வெட்டப்பட்ட மரம் ஒன்றில்
கூடிழந்து தவிக்கும் பறவை நான்..
வதிவிடம் தேடி வந்தவிடத்தில்
வார்த்தைகள் மெளனமாகி மனம் கதறுகின்றேன்...

ஓடி ஓடிச் சம்பாதித்தாலும்..
தேடி வரும் சொந்தம் எவருமின்றி
வாடிய பூவாய் மனம் வாடுகிறேன்..
புலம் பெயர்ந்து வந்த இடத்தில்..

கூடி வாழ்ந்த வாழ்க்கை
கூதூகலித்த அந்நாட்கள்
ஓடி ஒளிந்து விளையாடிய பொழுதுகள்
ஒருவரை ஒருவர் அன்போடு
அரவணைத்த நிமிடங்கள்..

கோடி கொடுத்தாலும்
தேடி திரும்ப வருமா அந்நாட்கள்..?

அதிகாலை காலை மாலை என
ஆலய மணி ஓசைகள்
வெள்ளைச் சீருடையில்
கள்ள மில்லா உள்ளங்கள்
பள்ளி செல்லும் காட்சிகள்..


படபடவெனச் சிறகடித்துச்செல்லும் பட்சிகள்...
பட்டொளியாய்ப் பறக்கும் சிறுவர்கள் கைகளில் பட்டங்கள்..
கூவிக் கூவி வியாபாரம் செய்யும் வியாபாரிகள்..
கூரை மேல் சேவல்
மதில் மேல் பூனை..
கூட்டுக்குள் கிளி..


காலைச் சுற்றும் நாய்..
கனிவாகப் பேச அயலவர்கள்..
ஓடி ஒளிந்து கொள்ள
அம்மாவின் முந்தானைச்சேலை..
தாவித் தோளில் தொங்க அப்பாவின்
வைரமான தோள்கள்..

சிறுவயது ஞாபகங்கள்
பற்றிக் கொள்ள..

முழுநிலவு துணையோடு
பாட்டுக்குப்பாட்டும்
கேட்டுக்கொண்டு பாத்திரத்தில்
போட்டுக்கொண்ட இசையும்
தூறல் மழையில் நனைந்த சுகமும்..


இதயமாய் வீசிய தென்றல்க் காற்றும்..
இதயத்தை வருடும் மலர்களின் நறுமணமும்..
இதயத்தை விட்டு அகலாத நினைவுகளாய்
இறுதி வரை இன்பமாய் தொடருகின்றது
என் ஞாபகங்கள் யாருமில்லா இந்த ஊரில்.
_________________________________________
கொடுத்து வாழ் கெடுத்து வாழாதே..
நிலாவில் உலாவரும் தனிமதி.

www.nilafm.com