புதன், 31 டிசம்பர், 2008

தீர்த்தன் நீங்களே

பாசம் வைத்த உங்களைப் பறித்துப்போனது யார்..ஐயா
நேசம் வைத்த உங்களைக் காலன் கவர்ந்து சென்றானோ.
உங்களில் எங்களைக்கண்டிருந்தோம்..ஐயா
அனைத்தும் உலகமாய்..நீங்களே ஒருவராகப் பார்த்திருந்தோம்..ஐயா


ஆலம் விழுதுபோல ஆடிமகிழ்ந்திருந்தோம்..
ஆலய ஒளிவிளக்காய் அகம் மகிழ்ந்திருந்தோம்..
ஆழம் காணாத அன்போடு அனுதினமும் பார்த்திருந்தோம்..
அன்பு என்றால் என்ன என்று ஐயா உங்களிடத்தில் கற்றிருந்தோம்..


ஆண்டு ஒன்று திதி நவமியில் அடைந்திருந்தோம்..
அதுவும் என்னை இவ்வுலகிற்கு அறிமுகநாளன்று
அதற்காக நன்றி சொல்ல அதே நாளில் திதியாய் நிவேதனம்
படைத்து அழகாய் இருக்க அருள் தந்தீங்களா ஐயா..


உங்கள் பிரிவால் வாடுகின்றோம் நாம் என்று சொல்லி..
சொர்க்கத்திலும் எம்மை நினைத்து நீங்கள் வேதனையடைய விரும்பவில்லை..ஐயா
கற்றுக்கொடுத்த நல்லறிவோடும், பண்போடும்..
நாளும் வாழ்வோம் உங்களை மறவாத நினைவுளால்


அசையும் உங்கள் உடலை மட்டுமே இழந்திருக்கின்றோம்..
அமைதியான உங்கள் பேச்சும், ஆற்றல் மிக்க அறிவையும்..
அனுசரித்துப்போகும் நல்ல பண்புகளையும்..
அன்போடு யாவரோடும் பழகவேண்டும் என்ற நல்ல குணங்களையும்...


வாழ்நாள் முழுவதும் பேணிப்பாதுகாக்க வேண்டும் என்ற
உங்கள் ஆசையையும் என்றும் கடைப்பிடித்து வாழ்ந்து வருவோம்..
கண்கள் கலங்க கையசைத்துப் போன காட்சி கண்முன்
நினைத்துக்கலங்கி என்ன பலன்.? தீர்த்தன் நீங்களே வணங்குகின்றோம் வாழ்விலே.


-----------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

www.thamilworld.com