ஞாயிறு, 28 நவம்பர், 2010

இன்பமான தவிப்பு...






இரு விழி படபடக்க..
இமையிரண்டும் சிறகடிக்க..
இருதயம் லப்டப்லப்டப் தாளமிட
இனி என்ன எழுத என இருகரங்கள் தடுமாற...

இனியவனே...
இது என்ன வேடிக்கை விளையாட்டு..!!
இனி ஒரு காலம் வருமாகில்..
இங்கிதம் தெரிந்து செயல்பட மாட்டேனா..?

இயம்பு நீயும்..
இணங்கல் தெரிந்து செயல்பட மறுப்பேனா....?
இலச்சை எனக்கிது உண்டென்று நீ உணர்ந்திட்டாலும்..
இவள் உன்பேர் வசித்திட்டாள் என்பதை காண்பாயா..?

இலையுதிர் காலங்கள் மரங்களுக்கு வரலாம்...
இவள் உன் நினைவில் வரலாமோ...?
இறக்கை ஒன்றிரண்டு இருந்திட்டால்...
இன்நேரம் இதை எழுதி கழித்திடுவாளா...?

இரு சிறகுகளும்..மின்சாரக் கம்பியில்..
இறுக்கிப் பிடித்திடும்..
இன்னல் நிலை நீ கண்டிட்டு..
இனிமையாக ரசித்தாய் நீ சிரிதாய்..இன்பமான என் தவிப்பை..
:)



இங்கிதம் - இனிய மன உணர்ச்சி; கருத்து; நோக்கம்; இனிய நடத்தை; இனிமை: சமயோசித நடை: குறிப்பு.
இயம்பு ( இயம்புதல் ) - இனிமையாகக் கூறுதல்
இணங்கல் - உடன்பாடு; பொருந்துதல்
இலச்சை - நாணம்; வெட்கம்

கருத்துகள் இல்லை: