செவ்வாய், 29 செப்டம்பர், 2009

சுகமான நினைவுகள்..

வாசலில் பார்த்திருப்பேன்..
அவன் வருகை கண்டு
உள்ளம் உவகை கொள்வேன்..

சுற்றவர நீலமும் சிவப்பும் கொண்ட...
கவரை அவன் கையில் கண்டவுடன்..
துள்ளிக் குதித்து ஓடிச்சென்று பெற்றிடுவேன்..

பரவசமாக படித்திடுவேன்..
பக்கத்து தோழியிடம் கொண்டே காட்டிடுவேன்..
கண்டவர் நின்றவர் எல்லோரிடமும்..

சந்தோசமாகச் சொல்லிடுவேன்..
என் அவர் எனக்கு அனுப்பிய கடிதம்..என்று..
ஓடி ஓடி உரக்கச் சொல்லுவேன்...

அன்பான முத்தங்கள் அதில் நிறையவுண்டு..
அள்ளி மணந்திடும் மல்லிகையும் அதிலுண்டு..
எண்ணங்கள் யாவும் எண்ணிலடங்கா சேதிகள் அதிலுண்டு..

குறைந்தது 8 பக்கங்கள் ஒரு கடிதத்திலுண்டு..
ஓரவிழிப் பார்வையில் பார்க்கும் போது..
யாரும் பார்க்கிறார்களோ என்ற எண்ணமுமுண்டு..

ஆயிரம் முத்தங்கள் அதிலிடுவேன்..
இரவுப் பொழுதினில் இருட்டினிலும் படித்திடுவேன்..
இருவிழி கண்ணீர் வழிந்தோட..இருபது தரம் படித்திடுவேன்..

நெஞ்சோடு அனைத்தபடி..
நிலவு மட்டும் விழித்திருக்க..
நினைவுகளால் விழி நீரால் நிறைந்திருக்கும்...

கனவுகள் மட்டும் வாழ்க்கையாய்..
நினைவுகளில் கதைகள் பல சொல்லி..
காலங்கள் கடிதஉறவில் மலர்ந்திருக்கும்..

நினைத்துப்பார்க்கிறேன்...
நிஜங்களை நினைக்கும் போது..
நிழல்கள் கூட சுகமான கதைகள் தான்..

--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

வண்ணனின் உண்மை வரிகள்..

Glitter Graphics


அருமை என்பது,
யாழ்ப்பாண ஒடியல் கூழ்
பெருமை என்பது,
என் தாயிற்கு மகனாகப் பிறந்தது

சிறுமை என்பது,
நான் டுபாயில் வாழ்வது
வறுமை என்பது,
நான் பாசத்திற்காக ஏங்கியது

கொடுமை என்பது,
வன்னியில் மனிதர்களை நிர்வாணத்துடன் வைத்து சுட்டது
கடுமை என்பது,
எனது உழைப்பு

இனிமை என்பது,
உங்கள் தமிழை படிப்பது.

வண்ணனின் உண்மை வரிகள்..
(எனது முகவரிக்கு அஞ்சலிடப்பட்ட தம்பி அபிவண்ணனின் வரிகள்)