புதன், 25 நவம்பர், 2009

நிலவே கலங்காதே..




ஓ....நிலவே
நீயும் அழுகிறாய்...
கவிஞர்களுன்னை கவிவரிகளால்
கலங்கப்படுத்தி விட்டார்கள் என்றா..?

தேய்ந்து தேய்ந்து வளருகிறாய்..
என்றதால்...உன்னை..
வருத்தி வருத்தி அழுகிறாயா..?

நாடுகள் பலவற்றிலிருந்து வந்து..
தேடுதல் பலவாயிரம் செய்து..
உன்னை நாசமாக்கி படமெடுத்தார்களென்றா..?

துணையேதுமில்லாமல்..
தனித்து விடப்பட்டு..
மேகத்தின் ஆடைபட்டு..
விதவைபோல் காணப்படுகிறாய் என்றா..?

இத்தனை கேள்விகளை கேட்டு..
இன்னும் உன்னை அழவைக்கிறேன்..
உன் அழுகைக்கு நானும் ஒரு காரணம்..
மன்னித்துக்கொள் நிலவே...

படித்தேன் உன்னைப்பற்றியதோர் செய்தி..
நிலவிலும் நீர் உண்டாம்..

எழுந்தது எனக்குள்ளே பல கேள்வி..
அதனால் கேட்டேன்
பதில் கூறு...ஏனெனில் நானும் அழுகிறேன்..
விடையே இல்லாத கேள்விகளைக்கேட்டு..

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11638

அதி காலைப்பொழுதில்..




அதிகாலைப் பொழுதில் நடந்து பார்..
உன் காலடி ஓசையைத் தவிர..
எந்த ஓசையும்
உனக்கு கேட்காது..

கண்கள் காணும்
காட்சிகளை ரசித்துப் பார்..
கவலைகள் எதுவும் மனதில்
கிட்ட நெருங்காது..

புதிய நாளை இன்முகத்தோடு..
வரவேற்றுப் பார்..

காக்கை கூட உன் அருகில்
வந்து கவி பாடும்..
தாவிச் செல்லும் அணிலும்..
ஓடி வந்து உன் தோள் சாயும்..

படபடவென்று பட்சிகள்...
ஒன்றாகப் பறந்து..
இயற்கையை ரசிக்க..
நேர் வரிசையாகயிருந்து
மின் கம்பியில் ஊஞ்சலாடும்..

தத்தி தத்தி
சின்னக் குருவிகள்..
கொத்தி கொத்தி இரை தேடும்..

வீட்டைக் காக்கும் நாய் கூட..
வீதி வரைக்கும் வந்து..
வாலை ஆட்டி மகிழ்ந்துகொள்ளும்..

அதிகாலைத் தென்றல்..
உலா வரும் நேரம்.. மெல்லிய குளிரில்
உன் தேகம் நனைந்து
மனம் களிப்புறும்..

வீதிகளுக்கு விடைமுறை
கிடைத்தது போல்..
எந்த போக்குவரத்து சலனமுமில்லாமல்..
அமைதியாக உறக்கம் கொள்ளும்..

எங்கிருந்தோ வந்த பூனைக்குட்டிகள்..
கால்களை உள்ளே மடக்கி..
மெல்ல தலையைக்குனிந்து
ஒன்றையொன்று பார்த்து
புன்முறுவல் செய்யும்..

மெல்ல வீசும் காற்றில்..
காகிதச் சருகுகள்..
ஓடி ஓடி ஓய்ந்து கொள்ளும்..

புத்தம் புது மலர்கள்..
பனித்துளிகள் பட்டு..
முகம் கழுவிக்கொள்ளும்..

ஞாயிறு வருகை கண்டு..நாணத்தால்
திங்கள் மெல்ல தன் முகத்தை..
மேகத்துனுள் ஒளித்துக்கொள்ளும்..

ஒளிரும் நட்சத்திரங்கள்..
விடியும் பொழுதில்..
தம் போர்வைக்குள்..
முடங்கிக் கொள்ளும்..

அதிகாலைப் பொழுதில்
நடந்து பார்..
மனம் அமைதியாகயிருந்து....
புது ராகம் இசைக்கும்..

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11538

சனி, 21 நவம்பர், 2009

கவிதை பாடும் அவள் இதழ்




இதழ்கள் விரிப்பழகில்..
உன் இதழ்களின்
சிரிப்பைக் கண்டேன்..

********************************

இதழ்கள் விரித்து..
இந்த ரோஜா
இதயம் மலர்ந்து..

முகம் சிவந்தது..
நாணத்தாலா..
நான் வந்ததாலா..


*********************************
யாரோ சொல்லிக்கொண்டு
போகிறான்..
அவள் இதழ்களைக் காணவில்லை என்று..
பையித்தியக்காரனவன்..
இதழ்களை காணத் தவறிவிட்டான்..

**********************************

கரு வண்டுகளும்..
உன்னைக் காதலிக்கின்றவோ..
வைத்த கண்வாங்காமல் பார்க்கின்றதே...

**********************************

இதழில் தேன் குடிக்க..
இமைகளில் கரு வண்டுகள்..
வட்டமிட்டு கவி பாடுகிறதோ..
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11536

உன்னில் காதல்..


மனதோடு பேசிப் பேசி..
வார்த்தைகளை உதிராமல்..
பேசிய வார்த்தைகளை பகிர்ந்து..

நித்தமும் அச்சடிக்க..
உன்னை மட்டும் காலிக்கிறேன்
உனக்கும் சொல்லாமலே..

நிலவுத் தாய்..




வருவாய் தருவாய்..
அருள்வாய் எனதுயிரே..
துயர் கொண்ட எனதுள்ளம்..
துடைத்திட விரைந்தோடி வருவாய்..

தினம் உன்னையே அழைத்தேன்..
மனம் தினம் பலமுறை தொழுதேன்..
மனம் கனத்து தினம் அழுதேன்..
சினம் கொண்டு நான், நீயின்றி துடித்தேன்..

தூறல் மழையில் நான் நனைந்தாலும்..
துடித்துப்போய் சேலைத்தலைப்பால் தலைதுடைத்திடுவாய்..
கார் இருளில் கைபிடித்து கண்சிமிட்டும் நட்சத்திரமாய்..
பார் முழுதும் பவணி வரும் நிலவும் நீதான் என் அம்மா.

உள்ளம் முழுதும் உந்தன் எண்ணம்..
கள்ளம் ஏதும் இல்லாத கொள்ளையின்பம் கண்டேன்..
வெள்ளம் போல் கொண்ட பாசம் தரவா..
தர வா..எனதுயிர் தாயே என்னோடு வா..

--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

வெள்ளி, 23 அக்டோபர், 2009

வஞ்சக வலையில்..


மனிதன் செய்த
வஞ்சக மின்சார வலையில்..
சிக்குண்டு

அநியாயமாக
தம் உயிர்களை
மாய்த்துக் கொண்ட..

ஏதும் அறியாத
அப்பிராணி உயிர்கள்...

அவனுக்கென்ன..

மரம் இருந்தாலும்
நிழல்..
இறந்தாலும்
விறகு..

அதுபோல்..
செத்தது மாடுகள் தானே..

அதன் பாலைக்குடித்தான்..
இனி தோல எடுத்து
மேளம் அமைத்து

அடிச்சுப் பார்த்து ஆட்டம் போடுவான்..
அவன் ஆட்டம் அடங்கும் போது..
இந்த மாட்டுத் தோல் அவனுக்காக
அப்பவும் இசையாகப் பேசும்..

(படத்தைப் பார்த்தவுடன் மனசு கலங்கிறது. அதனால் கிறுக்கியது இது)
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11329

நீ..


நான் என்னை
மறந்து நினைக்கும் போதெல்லாம்..
நீ மட்டும் தெய்வமாகிறாய்..

காரணம் கேட்டு..
மனச்சாட்சியை கேள்வி கேட்கும் பொழுதும்..
அங்கே நீ மட்டும் ஆட்சி செய்கின்றாய்..

தீபாவளி இனிப்புப் பண்டங்களை
ருசித்து சாப்பிடும் போதும்..
இனிக்க இனிக்க நீயே முன் நிற்கின்றாய்..

கோவிலுக்குச் சென்று..
அமுது உண்ணும் போதும்..
நீ தந்த அமுது தான் ஞாபகம்..

இனிப் போதும்..போதும்..
உறங்கவும் முடியவில்லை..
உண்ணவும் முடியவில்லை..

எண்ணங்கள் யாவும்..
மரத்தின் கிளை, இலை போலவும்..
வானின் நட்சத்திரங்கள் போலவும்..

நீயே தான்.....
என்னுள் சங்கமித்துள்ளாய்..
உன் நினைவேயன்றி வேறு எதுவுமில்லை...

நீ எனக்கு கற்பித்த..
வளர்த்த தமிழ்..
உப்புக் கடல் நீராய்..என் உதிரத்தில்..
என்னுள் உறைந்து கிடக்கின்றது..

கோபுர கலசம் போல்..
என் வாழ்வின் சுடர் ஒளி நீ..
உள்ளங்கை ரேகை போல்..
உள்ளத்தில் கலந்திருக்கும் உயிரும் நீ..

என் வாழ்வில் வந்த வசந்தம்..நீ
மெய்யுள் கலந்த பந்தம் நீ..
என்றும் என் சொந்தம்..நீ..

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11216

படத்தில்..


வீடெல்லாம் ஒப்பாரி..
பாட்டி இறந்து விட்டார்....
அப்பா மட்டும் புன்னகை படத்தில்..
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11190

விதவை



தான் விதவை என்று தெரிந்தும்..
அம்மா பொட்டு வைத்து பூ வைக்கிறாள்..
என் அக்காவிற்கு....

நிஜம்


நானும் அண்ணாவும்
சண்டைபோடுகின்றோம்..
அப்பா சிரித்துக்கொண்டிருக்கிறார் புகைப்படத்தில்..

உயிர் காதலர்கள்...

Etnies

Click Here For Images &
Etnies Pictures

இணை பிரியாத
உயிர் காதலர்கள்...
ஒரு ஜோடி பாதணிகள்..

நற் செய்தி



நற் செய்தியாம்..
அகதிகளுக்கு தீபாவளி புத்தாடைகள்...
உடை மாற்ற மறைவிடம் இல்லாத போது..

ஆன்மாவின் சிந்தனையில்..



ஆன்மா பாடிய
இனிய சங்கீதம்..
என் தாயின் தலாட்டு..
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11179

அவலம்..


ஆயுதங்கள் பேசியதால்..
(தலை)எழுத்துக்கள் கால்களை இழந்தன
வ த பே (வா,தா,போ)

********************************

இலங்கைத் தமிழர்களுக்கு
சுதந்திரம் கிடைத்துவிட்டது..
பத்திரிகைகளில் மட்டும்..

********************************

ஓ...நீல வானம்
தரையில் பாய்விரித்திருக்கின்றதே..
அகதிகளின் கூடாரங்கள்..

*********************************

வாழ்ந்து பாரு...



ஓடும் வரை ஓடு..
ஒருவரையும் துன்புறுத்தாது ஓடு..
தேடும் வரை தேடு..
தேடிய யாவும்
நேர்மைதானா என்று பாரு..

வாழும் வரை வாழு..
வாழும் போது
நல்லதை மட்டும் செய்து வாழு..
கூறுவதைக் கூறு..
அடுத்தவரைக் குறை கூறாது கூறு..

உன்னை நீ முதலில்
உணர்ந்து கொள்ளு..
பிறருக்கு..
உண்மையாக நடந்து கொள்ளு.

நாளைய நாளில்
நம்பிக்கை கொள்ளு..
நான் நான் என்ற அகங்காரத்தை
விட்டுத் தள்ளு.
--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11094

தீபாவளி..



பட்டாசு கொளுத்தி..கோலாகலமாக
தீபாவளி கொண்டாட்டங்கள் முடிந்துவிட்டது..
தெருக்கலெல்லாம் அலங்கோலமாக காட்சி தந்தபடி..


http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11239

செவ்வாய், 6 அக்டோபர், 2009

பாடமறந்த பூங்குயில்..



திருமணம் என்னும் பந்தத்தில்..
உருவான பெண்ணே..
உருகும் உன் மனநிலை கண்டு
கலங்குகின்றேன் நானே..


மாலையிட்ட சொந்தம்
காலங்கள் செல்லச்செல்ல..
வேதனையும், சோதனையும் தந்து..
உன்னை வாட்டி வதைப்பதை
நினைத்து கலங்கிநிற்கின்றேன்..

பண்பாக நடந்து கொண்டால்..
அன்பாக எடுத்துச் சொல்லலாம்..
பிரச்சனை என்று வந்தால்
பேசித் தீர்த்து வைக்கலாம்.

பிரச்சனையே அவரானால்..?
எதையும் தாங்கும் இதயம்
உனக்கு வேண்டும்..

ஆணவம் தலைக்கேறி
அடாவடித்தனம் செய்யும் போது
யார் சொல்லி என்ன பலன்..?

பிரிவு என்ற சொல்லுக்கு
இலகுவில் பாலம் அமைத்துவிடலாம்..
அமைத்த பாலத்தில் வாழ்க்கைப் பாதையை
சிறப்பாக அமைக்கலாம் என்று மட்டும் எண்ணிவிடாதே..

காற்றடித்து மூங்கில் முறிந்துபோவதில்லை..
கூட்டுக்குள் வாழும் கிளி ஊமையாய் வாழ்ந்ததில்லை..
அலைகள் அடிப்பதால் மீன்கள் கரைவந்து சேர்வதில்லை..
இருண்ட பொழுதும் புலராமல் போனதில்லை..

நேற்று வரைக்கும் இரவினில் நீ
தலையணையை நனைத்தது போதும்..
அழுவதால் தொடரும் துயர் தீரப்போவதில்லை..
பரந்தவானில் அன்புள்ளங்கள் நிறையவுண்டு..
மனம் தளராமல் அதைப்புரிந்து வாழப்பழகிக்கொள்.

வெள்ளி, 2 அக்டோபர், 2009

உள்ளத்தில் கலந்த உறவே..‏



பழகிய நாட்கள்..
பசுமையான நினைவுகள்..
பல ஆண்டுகளாக
நினைக்க மட்டும்தான்
என்றே என் மனம் ஏங்க..

அதிகாலைப்பொழுதினில்..
காலைத் தென்றலாய் நீ
காற்றலையில் கடமையாற்ற

தூரத்து மல்லிகையின்
மணம் காற்றோடு கலந்து
உள்மூச்சில் விழுந்தது போல்..

நீங்கதானே..என்று
என்னை இனங் கண்டு கொண்ட
அன்புள்ள கிருஷ்ணா..

ஆண்டுகள் பல கடந்தபின்பும்..
ஆடிப்பாடித் திரிந்த கதைகள் நீ சொல்ல..
அதை இடைநிறுத்தி அதன் தொடர் நான் சொல்ல..
நீயூம் நானும் பின்னோக்கி அந்தப் பருவத்திற்குச் செல்ல..

ஒரு நாள் நீடிக்காத
சின்னச் சின்ன கோபங்கள்..
பொய்யான பந்தையங்கள்...
களவாய்ப் பிடுங்கும் மாங்காய்கள்

பார்த்த படங்கள்...

ம்....இதுவரை
யாருமே பார்க்காத பக்கங்கள்..

ஓ..அத்தனையும்
நினைத்துப் பார்க்கிறேன்..
மலரில் விழுந்த மழைத்துளியாய்..
என் கண்ணில் முத்தாய் கண்ணீர்த் துளிகள்..

பலவர்ண நிறங்களில் தினம்
பூத்து மணம் பரப்பும் பூக்களாய்

எனது சகோதரர்களும்..
உனது சகோதரர்களும்..
ஒன்றாகச் சேர்ந்து..
முற்றத்தில் பூத்துக்
கைகோர்த்து திரிந்த நாட்களை
அந்த முற்றம் கூட மறந்து விடாது..

போகிற திசை தெரியாமல்..
ஓடுகின்ற அருவி போல்..
நேரம் போவது தெரியாமல்
நெடு நேரம் பேசிக்கொண்டேயிருக்கிறோம்..

ஓடிக்கொண்டு இருக்கும் கடிகாரம்..
அடித்துக்கொண்டிருக்கும் இசைபோல்..
ஓயாது என் நினைவில் உன் எண்ணம்..

சரியாக இடப்பட்ட முகவரி
காலம் கடந்தாலும்..
கை வந்து சேருவது போல்..
உண்மை அன்பை நெஞ்சார நேசித்த
எங்கள் உறவு பல ஆண்டுகள் கடந்த பின்பு
காற்றலை சேர்த்து வைத்து விட்டது..

என் சகோதரிகள் சார்பாக
உன்னைக் கேட்கிறேன்..
எங்காவது போவதாகயிருந்தால்
சொல்லிவிட்டுப்போ..ஆறுதலாகயிருக்கும்..

உன்னைக் கண்டு கொண்ட சந்தோசங்களிலும்..
உன்னைக் காணவில்லையே என்று
ஏங்கிய இதயத்தின் வலியை
மீண்டும் உருவாக்கிவிடாதே..

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11045

செவ்வாய், 29 செப்டம்பர், 2009

சுகமான நினைவுகள்..

வாசலில் பார்த்திருப்பேன்..
அவன் வருகை கண்டு
உள்ளம் உவகை கொள்வேன்..

சுற்றவர நீலமும் சிவப்பும் கொண்ட...
கவரை அவன் கையில் கண்டவுடன்..
துள்ளிக் குதித்து ஓடிச்சென்று பெற்றிடுவேன்..

பரவசமாக படித்திடுவேன்..
பக்கத்து தோழியிடம் கொண்டே காட்டிடுவேன்..
கண்டவர் நின்றவர் எல்லோரிடமும்..

சந்தோசமாகச் சொல்லிடுவேன்..
என் அவர் எனக்கு அனுப்பிய கடிதம்..என்று..
ஓடி ஓடி உரக்கச் சொல்லுவேன்...

அன்பான முத்தங்கள் அதில் நிறையவுண்டு..
அள்ளி மணந்திடும் மல்லிகையும் அதிலுண்டு..
எண்ணங்கள் யாவும் எண்ணிலடங்கா சேதிகள் அதிலுண்டு..

குறைந்தது 8 பக்கங்கள் ஒரு கடிதத்திலுண்டு..
ஓரவிழிப் பார்வையில் பார்க்கும் போது..
யாரும் பார்க்கிறார்களோ என்ற எண்ணமுமுண்டு..

ஆயிரம் முத்தங்கள் அதிலிடுவேன்..
இரவுப் பொழுதினில் இருட்டினிலும் படித்திடுவேன்..
இருவிழி கண்ணீர் வழிந்தோட..இருபது தரம் படித்திடுவேன்..

நெஞ்சோடு அனைத்தபடி..
நிலவு மட்டும் விழித்திருக்க..
நினைவுகளால் விழி நீரால் நிறைந்திருக்கும்...

கனவுகள் மட்டும் வாழ்க்கையாய்..
நினைவுகளில் கதைகள் பல சொல்லி..
காலங்கள் கடிதஉறவில் மலர்ந்திருக்கும்..

நினைத்துப்பார்க்கிறேன்...
நிஜங்களை நினைக்கும் போது..
நிழல்கள் கூட சுகமான கதைகள் தான்..

--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி