ஞாயிறு, 24 அக்டோபர், 2010

பெண்ணாகப் பிறந்தது பாவமே..





என் அம்மா தாயே
ஏனம்மா என்னை
பெண்ணாய் பெற்றாய்..

மகளாய் நானுக்குப் பிறந்தாலும்...
பிறர் வீட்டு மருமகளாய்
ஏன் அனுப்பிவைத்தாய்..?

தட்டானிடம் கொடுத்து...
தங்கத்தால் அணிகலன்செய்து..
தட்டிக்கவி பாடி..
தங்கமே அங்கு நீ
தங்குமிடமே என்றனுப்பிவைத்தாய்..

வந்த நாள் சில நாளில்..
வகுமைக்கு ஏது குறைச்சல்..
வயிரவமின்றி வாழ்க்கை சென்றதம்மா..

பொட்டு வைத்த பூ முகத்தை
தொட்டுப்பார்த்து ரசித்த என் கணவர்..
கட்டுக்கதைகள் சொல்லுவதை நீயறிவாயோ..

தங்கநகை அணியாமல்..
தவறியும் இருக்கவிடமாட்டாமலிருந்த
என் கணவர்
தரித்திரம் பிடிச்சவளுக்கு தங்க நகை
உனக்கொரு கேடா என்கிறாரேயம்மா..

அள்ளி முடித்த கூந்தலோடு இருந்தாலும்..
அழகாய் தலையிழுத்து பூவும் பொட்டும் வைத்து
வா என்ற என் கணவர்..
யாருக்காகவடி இந்த அலங்காரம் எல்லாம் என
யாவரும் பார்க்க யாமசரிதன் போல் சொல்லுகிறாரம்மா..

அடுக்கடுக்காய் நீ தந்த சேலைகள் எல்லாம்..
அலுமாரியில் வைத்தே அழகு பார்க்கிறேனம்மா..
அவர் முன்னிலையில் நான் அழகற்றுப் போனேனம்மா..

பால் காரன் வந்தாலும்..
தபால் காரன் வந்தாலும்..
நான் தலை காட்டக்கூடாதாமம்மா..

நோய் வந்து படுத்தாலும்..
நொட்டைச் சொல் சொல்லி..
கட்டையால் அடிக்கிறாரம்மா..

பெற்றவர்கள் மானம் காக்க..
பெரும்பாலும் பொறுத்துக்கொண்டே வாழ்வேனம்மா..
பெண்ணாய்ப் பிறந்தது பாவமம்மா..

கருத்துகள் இல்லை: