ஞாயிறு, 4 மே, 2008

ஒரு மணிநேரம்.



ஒவ்வொரு நாளும் வருகிறாய்


ஒருமணிநேரப் பேச்சால் எனைக் கவர்கிறாய்..


குறைவாகப் பேசுகிறாய்


நிறைவாக என்மனதில் நிலைத்து நிற்கிறாய்..


நீ பிரிந்து செல்லும் நேரங்களில்


என்னை நானும் உணர்ந்து தவிக்கிறேன்..


எதிர்காலத்தில் உன் நலனில்


அக்கறையாய்இருக்க ஆசைப்படுகிறேன்..


இருந்துவிடு இன்னும் அதிகம் என்னோடு..


என்று சொல்லத்தயங்குகிறேன்..


என் உரிமை நீயில்லை


அதனால் நீசெல்ல நான் தடை ஏதும் விதித்திடேன்...


வேறு இடம் வேலைக்கு நான்செல்ல


திரும்ப இங்கு வரமாட்டாயா என ஏங்குகிறாய்..


வருவேன் நான், உனக்காக


என்றாவது ஒருநாள்..திருப்தியோடு


இன்றும் உன் ஒரு மணிநேரத்தை முடித்துக்கொண்டு..நினைத்துப்பார்க்கிறேன்...


உன்னைப்போல் எத்தனை சிறுவர்களை


நித்தமும் கவனமாகப் பார்க்கிறேன்..


ஆனால் நீயோ என்னை அல்லவா அன்பால் பார்க்கிறாய்..


என்னதான் அதிசயம் என்னில் கண்டாய்..


உன் அன்னை கூட சொல்லி மகிழ்கிறாள்..


தூக்கத்திலும் என் பெயரைச்சொல்லி


நீ அழைத்தாய் என்று..


உன்னை நானும் பிரிந்திடுவேனோ என எனக்கும் ஏக்கமாகத்தானிருக்கு...


அன்னையின் கரம் பிடித்து வருகிறாய்..


வந்ததும் என் கரம் பிடித்து மகிழ்கிறாய்..


உடற்பயிற்சி செய்து விட்டு அன்னை உன்னை அழைக்கையில்..


அழுது நீயும், போகாது அடம்பிடிக்கிறாய்..


இறைவனிடம் அப்போது கேட்டேன்...


இந்த ஒரு மணிநேரம் நீளாதோ என்று..


இப்போது கேட்கிறேன்..


தினமும்இந்த ஒரு மணிநேரமாவது உன்னைக்காண வழிவகுக்காதோ.


கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி

கருத்துகள் இல்லை: