புதன், 4 ஜூன், 2008

நாற்காலி.




அட ஏனய்யா இந்த நாற்காலிக்கு அடிபாடு..
இதை எண்ணிதான் நீ பாரு..

நாட்டு தலைவன் நீ
நாடு போற்ற வாழும் மனிதனும் நீ..

போட்ட மேடையில் எங்கிருந்தாலும்
உன் மதிப்பு ஒன்று தான்..

யாருபோட்ட சட்டம் நடு
மையமாக உனக்கிருக்கும் இருப்பிடம்...

போட்ட கதிரையும் சாதாரணமானதா..?
அரசபை அரியாசணம் உனக்கு தேவைதானா..?

சாதாரண கதிரை போட்டு விட்டால்..
சலிப்பாய் நீயும் இருப்பதென்ன..?

அவனவன் உழைப்பில் அநுபவிக்கட்டும்
ஆசையுடன் பல இருக்கைகள்..

ஏழை வீட்டில் எரியும் நெருப்பும்...
உன் வீட்டில் எரியும் நெருப்பும் ஒன்றுதான்..

இதை உணர்ந்து தான் நீயும் பாரு..
தலைவருக்கு ஒரு கதிரை, அதிலும் நட்ட நடுவில்..

சரி போகட்டும் என்றுவிட்டால்..
மாலையிலும் வேறுபாடு..

மனிதரில் வேறுபாடில்லை என்றுவிட்டு..
போடும் மாலையில் ஏனய்யா இந்த வேறு பாடு..

ஆளுயர மாலை போடுவது போல ஒரு போட்டோ..
வீதியோரங்மெங்கும் விலாசமாய் விளம்பரங்கள்..

செய்யும் நற்பண்புகளுக்கும் சேவைக்கும்..
மாலையிலும், கதிரையிலும் தேவைதானா எடுபாடு..???

பகட்டான வாழ்வும் நீயாக தேடும் புகழும்..
பாரினில் என்றும் நிலைத்ததில்லை..

பகட்டாக வாழ நீயும் நினைக்காதே..
பாசத்தை உண்மையாக வைத்துப்பழகு..

படித்தவர் படிக்காதவர் என்றதை மறந்து நீயும்..
பண்பாக நாளும் மனிதரை மதித்துப் பழகு..

நாற்காலி கூட உனக்கு ஒரு நல்வழிகூறும்..
நாமாக நாடா விட்டாலும் தாமக வந்து சேரும்.

கருத்துகள் இல்லை: