செவ்வாய், 21 ஏப்ரல், 2009

மழையில் ஓர் மலர் வசம்..




மார்கழி மழைக்காலத்தில்..
கோலமயில் சாமரம் வீச..
பாவலன் அவன் வந்தான்..
மலர்ப்பாவையைத்தேடி..

கொட்டும் மழையில் நனைந்து
மொட்டுவிரித்துப் பூத்த மலர்
நாணத்தால் தலைகுனிந்து
தரையை நோக்க..

கள்ளச் சிரிப்பினில்
அவன் முத்துக் கவிதை சிதற
மனக் கோர்வைக்குள்
மாலையாக தொடுக்க..

தொடுத்த கவி மாலை
அச்சிட்டு அரங்கேறமுன்பே..
மழைத்தண்ணீரில் இதழ்கள்
உதிர..


வாழ்வது ஒரு நாள் என்றாலும்
மலர் மலர்ந்து மணம் பரப்பி மண்ணை
முத்தமிட.....
உதிர்ந்த மலர் நீ
இனி மணப்பதற்கு இடமேது..
அவசரமாய் அவனும் சென்றான்..

ஓ...

எங்கோ ஒரு இடத்தில் மழையும் மலரும்.

--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி


http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10383

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

very nice poeum

மதி சொன்னது…

உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி "இன்னார்..." ?

மதி சொன்னது…

பாராட்டுக்கு நன்றி நண்பரே...

paris siva சொன்னது…

mathy ungal ella kavithikalum supper..matta aakangalum very nice.