ஞாயிறு, 24 அக்டோபர், 2010

ஜீவ காருண்யம்.



என்னை சாய்த்து
தன்னை வளர்த்து - ஈற்றில்
மண்ணில் நீக்க
என்னில் ஏற்றுவதேனோ..

உன்னை நீ அறிந்திடின்
என்னையும் நீ அறிந்திடுவாய்..
மண்ணை சரண் அடைந்திடின்- என்
கண்ணையும் நீ துடைப்பாய்..

மண்ணோடு நீ உக்கினால்..
மரமாவது வாழும்- என்னை
மண்ணாக்கினால் மனிதா
மண்கூடச் சோரும்.

3 கருத்துகள்:

தமிழ்த்தோட்டம் சொன்னது…

அருமை வாழ்த்துக்கள்

தமிழ்த்தோட்டம் சொன்னது…

வரிகள் அனைத்தும் அருமை, உணர்வு பூர்வமா இருக்கு

தமிழ்த்தோட்டம் சொன்னது…

அருமை வாழ்த்துக்கள்