அன்புள்ளங்களின் இதயங்களின் ஈரம்..
அறிவிப்பாளர்களை கண்டே மனமகிழும்..
ஆயிரம் கண்கள் ஒன்றாகக் காணச்செய்யும்..
ஆடலுடன் பாடல்களும் அரங்கேறச்செய்யும்..
இதுவரை ஏங்கிய நாட்களின் தாகம் தீரும்..
இனிமையான முத்தமிழ் கானங்கள் காதில் வந்தேன்பாயும்..
ஈரொன்பதாண்டுகள் நிறைவின் காற்றலை கீதங்கள் கதை பல சொல்லும்..
ஈழம் தமிழா் நெஞ்சங்கொண்ட ஏக்கமிடரும் சற்றே ஆறும்..
உலகெங்கும் அலையலையாய் வலம் வரும்..
உண்மை அன்பை என்றும் அது தரும்..
ஊமை நெஞ்சின் ஓசைகளையும் வாங்கிக்கொள்ளும்..
ஊர் மக்களுக்காய் தன் சேவையை நலனே செய்யும்..
எத்தனை இடர்கள் நம்மைச் சுற்றிவந்தபோதிலும்..
எட்டுத்திக்கும் நல்மருந்தாய் நமக்கின்பம் தந்திடும்..
ஏணி கொண்டு நாம் ஏறாத போதும்...
ஏலம் கொண்ட வாசனையாய் எம்மை உயர உயர பறக்கச்செய்யும்..
ஐயம் எம்மை விட்டுப்போக்கும்..
ஐப்பசியில் ஒன்றாய் ஐக்கியமாக்கும்..
ஒவ்வொரு மனங்களிலும் ஏக்கம் தீர்ந்துகொள்ளும்..
ஒருமனப்பாடாய் காற்றலை கதைகள் பேசச்செய்யும்..
ஓங்கித் தமிழர் குரல் எழுப்பி அரங்கம் நிறையச் செய்யும்..
ஓயாமை இன்பத் தமிழ் வானொலி தரும் சுவை அறியச்செய்யும்..
ஒளவியம்(பொறாமை) அகற்றி நல்லறிவை வளர்க்கச்செய்யும்..
ஒளடதம்(மருந்து) போல் வாழ்நாளில் வந்தெம்மை ஆற்றும்..அது வசந்த விழாவில் நிறைவேறும்..
நன்றியுடன் தனிமதி..
(வருகின்ற ஐப்பசி 2 ல் நடைபெறவிருக்கும் ஐ.டி.ஆர் வானொலியின் வசந்தவிழாவிற்காக எழுதியிருந்தேன்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக