skip to main |
skip to sidebar
கடந்த கால நினைவுகள்.. உடைந்த மனதில் ஆலமரவேராய் ஆழப்பதிய.. முகம் தெரியாத நீயூம்.. அறிமுகமில்லாத நானும்.. நட்பெனும் அன்பால் இணையத்தில் இணைந்து.. இன்றோடு ஆண்டுகள் இரண்டாயிற்று.. இன்னும் நான் மறக்கவில்லை அன்பால் நட்பால்..நீ கூறிய அழகான அறிவுரைகளை.. நடந்து வந்த பாதையில் காலில் குத்திய முள்ளு தானே.. தூர தூக்கி எறி..என்றாய்.. பாதையைப் பார்த்து நட பாதியிலே வந்த துன்பம்..அது தேடி அலைந்து போகாதே..என்றாய்.. மீதியுள்ள அழகான வாழ்வை மீண்டும் அமைத்துவிடு அழகிய நந்தவனமாக..என்றாய்.. ம்.. நினைத்துப்பார்க்கிறேன்.. அருகில் இருந்து கூறியது போல அன்பான வார்த்தைகளால்.. நட்பெனும் பூந்தோட்டத்தில் அன்பெனும் மலர்களால் இன்னும் பல ஆண்டுகள் பூத்திருப்போம்.. நண்பா உனக்கு நன்றி சொல்லி நம் நட்பைப் பிரிக்கவில்லை.. உன்னைக் கண்டு கொண்ட நாளுக்காய் ஓர் நன்றி மட்டும்.
தென்றல் மெல்ல வந்து என்னைத் தீண்ட.. உன் செல்லக் கன்னமதை நான் தழுவ.. உன் உரிமை நான்.. மறந்து நீயும் என்னைத் தள்ளித் தள்ளி விடுகிறாயே.. தென்றலே வீச மறந்துவிடாதே.. விரல்களால் முடிகோதி பேசும்... அவள் விதம்.. என்னை மறுபடிமறுபடியும் அவள்.. கன்னம் தொட அழைகின்றது... முடிசூடா மன்னன் தலைமுடி நான்.. எனக்குள் பெருமை பேசிக்கொண்டு.. உன்னால் சிரிக்கிறேன்.http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10521
முடிவில்லா தொடரை எண்ணி வலி கொண்ட நெஞ்சோடு பதற.. உள்ளிருக்கும் வரை உலகம் கூட.. கபடம் என உள்மனம் சொல்ல.. பசி கொண்ட மானிடர் பட்டினியில் சாக.. ருசி கண்ட கயவர்கள் கழுகுகளாக மாற.. கசிகின்ற இதயங்களில் கவலைகள் படர.. வசிப்பிடமில்லாத வாழ்வில் வாழ்க்கையை தேட.. இருளைப்போக்க கிடைத்த தீக்குச்சி போல.. இருண்ட வாழ்விலும் ஒளி வீசும்..மெல்ல. இருளில் இருந்து கொண்டு பேசுவதை விட.. வெளியில் வந்து வெளிச்சத்தில் பேசுகிறேன். http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10478
நீண்ட நேரப் பயணத்தில் நீ இங்கு வந்தபோது நீயும் நானும் இதயங்கள் இடமாறி இன்னல்கள் தவிர்த்து இன்புற்று சிரித்திருந்தோம்.. நாட்கள் போவது தெரியாமல் நாளும் பொழுதும் பறவைகள் போல் நாளைய நாளை மறந்திருந்தோம் வேளை வந்த போது நீ போகும் நாளும் வந்த போது.. வேதனையில் தீயிலிட்ட புழு போல் நானும் மனம் வெந்து துடித்தேன்.. துடித்தது நான் மட்டுமா ஏன் வந்தோம் ஏன் பிரிகிறோம்.. விடை தெரியாமல் நீயூம் துடித்தாய்..அழுதாய்.. ஆறுதல் கூற யாருமற்ற நிலையில்.. அழுத விழிகளோடு கையசைத்து கண் மறைவில் நின்று பறந்து சென்று விட்டாய்.. தூங்காத விழிகளோடு இன்றும் உன் நினைவில் உனக்காக என் மனம் எழுதத் துடித்த வரிகளோடு நினைவுகளை மீட்டி உனக்காக தூங்காத என் கண்கள் கவிபாடுகிறது. http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10764