கலைகளுக்கெல்லாம்
அதிபதியாக விளங்கிடும்..
அருள்மிகு தேவி சரஸ்வதிதாயே
நாமகள் உன்னையே நாவாறப் பாடவந்தேனே..
நான்கற்றதன் கல்வியறிவை..
நற்றமிழில் சொற்கொண்டு
நாமகள் உனக்கோர்..துதியொன்றை
சுவை பட தர வரம் தருவாயே..
சபை நடுவே
சரஸ்வதி துதியாற்ற..
வாழ்த்திப் பாராட்டி
வழியமைத்துவிடு கலைவாணிதாயே..
வெண்ணிற ஆடையில்..
வெண்டாமரை அமர்வில்..
கண்ணிரு மணியில்..
விண்தாரகைகள் ஒளியில்..
அருகில் அன்னமும்
முன்னங்கைகளிலே வீணையும்..
பின்னிரு கரங்களில் ஓலைச்சுவடியும்...ஜெபமலையும்..
கொண்டதோர் கோலமும்..கொண்ட நாயகியே..
ஆய கலைகள் அறுபத்தினாங்கிற்கும்..
ஆதி பராஷக்திகொண்ட..
அகிலமெல்லாம் போற்றும் ஆகமச் செல்வி தாயே..
அருள் மிகு ஞானசரஸ்வதி நீயே..
கல்லாதார் இவ்வுலகில்
இல்லாதிருக்க
எல்லாச் செல்வங்களும்..
அளித்திட வா கலைமகளே..
கள்ளமில்லா உள்ளம் பெறும் கல்வியை
எல்லையில்லா வானம் போல்..பரந்து
ஏழை எளியவர்க்கும் எடுத்துச் செல்ல
எழுத்தாற்றலை எல்லோருக்கும் அருளிப்பாயா தேவி..
மயில் வாகனத்தை உனதாக்கிக்கொண்டு...
மக்களெல்லாம் உணரும் வகையில்..
மயிலிறகு போல் கல்வியறிவை விரித்து..
மறுபடியும் இறகை மடிக்கும் அடக்கத்தை உணர்த்திய மாதேவி நீயே..
ஆடையிலும், அன்னத்திலும் காட்டியருளிய
அப்பழுக்கற்ற தூய்மை
அனைவரும் கடைப்பிடிக்க
ஆசிகள் வழங்கி அரவணைப்பாய் தாயே.
அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி பகவன் முதற்றே உலகு.
(மொன்றியல் துர்க்கா பதி தமிழ்ப் பாடசாலையில் நடைபெறவிருக்கும் வாணிவிழாவிற்காக எழுதிக்கொடுத்திருந்தேன்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக