இரு விழி படபடக்க.. இமையிரண்டும் சிறகடிக்க.. இருதயம் லப்டப்லப்டப் தாளமிட இனி என்ன எழுத என இருகரங்கள் தடுமாற... இனியவனே... இது என்ன வேடிக்கை விளையாட்டு..!! இனி ஒரு காலம் வருமாகில்.. இங்கிதம் தெரிந்து செயல்பட மாட்டேனா..? இயம்பு நீயும்.. இணங்கல் தெரிந்து செயல்பட மறுப்பேனா....? இலச்சை எனக்கிது உண்டென்று நீ உணர்ந்திட்டாலும்.. இவள் உன்பேர் வசித்திட்டாள் என்பதை காண்பாயா..? இலையுதிர் காலங்கள் மரங்களுக்கு வரலாம்... இவள் உன் நினைவில் வரலாமோ...? இறக்கை ஒன்றிரண்டு இருந்திட்டால்... இன்நேரம் இதை எழுதி கழித்திடுவாளா...? இரு சிறகுகளும்..மின்சாரக் கம்பியில்.. இறுக்கிப் பிடித்திடும்.. இன்னல் நிலை நீ கண்டிட்டு.. இனிமையாக ரசித்தாய் நீ சிரிதாய்..இன்பமான என் தவிப்பை..
ஆடைகள் நூறு வகை... அதை ஆளும் வகை - அது ஆளாளுக்கு சிறந்த கதை.. மேடை தனில் ஒரு வகை... மேலோர் கீழோர் தாங்கி வரும் வேறொரு நிலை.. மங்களத்திற்கு ஒரு வகை.. மயான அமைதிக்கு ஒரு வகை.. கட்சிக்கு ஒரு வகை....அது காட்டும் பொருளில் இருள் ஒளி வேறு நிலை.. பாவலருக்கு ஒரு நிலை.. பள்ளிச் சிறுவர்களுக்கு வேறொரு நிலை.. நாடு விட்டு நாடு போனால்.. நாமும் தேடும் அந்த உடை.. கூடு விட்டு ஆவி போனால்.. கூடி நிற்போர் காட்டும்....கருப்பு வெள்ளை.. அது தரும் மன நிலை.. போதி மரத்து புத்தரும்.. போதனை தரும் வள்ளரும்.. போர்த்திருக்கும் காவி தனை.. ஆடவரும் மங்கையரும்.... ஆடையதுவே என்றே தேந்தெடுத்தயாடையது..... பாலுக்கு ஒரு ஆடை... பாலகனுக்கும் ஒரு ஆடை... நீதிக்கு ஒரு ஆடை... நீதி தேவனுக்கு ஒரு ஆடை... காவலுக்கு ஒரு ஆடை.. தாதிக்கு ஒரு ஆடை.. வைத்தியனுக்கு ஒரு ஆடை.. வையகத்திற்கு ஒரு ஆடை.. எத்தனை ஆடை வந்திடினும்.. அத்தனையும் அதன் வெளித் தோற்றமே.. வெள்ளாடையெனும்... கலங்கமில்லா உள்ளாடை நீ நெஞ்சத்தில் கொண்டிருந்தால்.. அழுக்குள்ள ஆடையிலும்.. தூய்மை அங்கே வெளுத்து நிற்கும். அதுவே நீ கொண்டிருக்கும் சிறந்த ஆடையென்பேன். வெளித்தோற்றத்தைக் கண்டு நம்பி விடாதே.. வெள்ளையுள்ளம் எங்கே என தேடிச்சென்று... உள்ளே அகம் கண்டு கொள்வாய் நன்றே.
யுத்தம் போதுமடா நந்த லாலா
-
உலக சமாதனத்திற்காக ஒரு பாடல்
பாடியவர். எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் - ரவிப்பிரியன்
பாடல் எழுதியவர் - முகுந்தமுரளிநாததாஸ்
தயாரிப்பு - விஷ்ணுமுரளி