
நீண்ட நேரப் பயணத்தில்
நீ இங்கு வந்தபோது
நீயும் நானும் இதயங்கள்
இடமாறி இன்னல்கள் தவிர்த்து
இன்புற்று சிரித்திருந்தோம்..
நாட்கள் போவது தெரியாமல்
நாளும் பொழுதும் பறவைகள் போல்
நாளைய நாளை மறந்திருந்தோம்
வேளை வந்த போது
நீ போகும் நாளும் வந்த போது..
வேதனையில் தீயிலிட்ட
புழு போல் நானும் மனம்
வெந்து துடித்தேன்..
துடித்தது நான் மட்டுமா
ஏன் வந்தோம் ஏன் பிரிகிறோம்..
விடை தெரியாமல் நீயூம் துடித்தாய்..அழுதாய்..
ஆறுதல் கூற யாருமற்ற நிலையில்..
அழுத விழிகளோடு கையசைத்து
கண் மறைவில் நின்று
பறந்து சென்று விட்டாய்..
தூங்காத விழிகளோடு இன்றும்
உன் நினைவில் உனக்காக
என் மனம் எழுதத் துடித்த
வரிகளோடு நினைவுகளை மீட்டி
உனக்காக தூங்காத என் கண்கள் கவிபாடுகிறது.
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10764
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக