
அலுத்துக்கொண்ட இதயம்
இன்னும் அழுதுகொண்டேயிருக்கிறது
பகட்டான வாழ்வுக்கு மனிதன் மட்டும்
பட்டம் விட்டுக்கொண்டிருக்கிறான்...
சனிக்கிழமை என்றாலே கொண்டாட்டம்...
அதுவும் கோடைகாலத்தில் திருவிழாக்காலம்..
அதிகாலையில் வந்திடும் அயல்நாட்டிலிருந்து அழைப்பு...
ஊர்ச்செய்தி, உலகச்செய்திகளுடன் அலுத்துக்கொண்டபடி மனதும்...
அபூர்வமாக வந்திடும், பகல் மூன்று மணிக்கு
அன்னார் பூதவுடல் தகனம்.......அப்போதும் செல்லுகிறேன்..
அடுத்தாற் போல் மாலை ஆறு மணிக்கெல்லாம் மணமக்கள் வரவேற்பு...
அழுத விழிகளுக்கு மையிட்டு, அடடா நல்ல கொண்டாட்டம் கண்டு மகிழும் மனது...
இரவு நேரம் உறங்கும் நேரம் உறக்கமின்றி
பக்கம் பக்கமாக பார்த்து தட்டிச்செல்லும் போதெல்லாம்..
அடிக்கடி மாறும் முகபாவங்களும் மனதும்..
மாறிமாறி மேடை ஏறாத, வாழும் மானிட வாழ்க்கை..
ஒரே நாளில் கருப்பு உடையில்
கவலை மனதில்...
ஒரே நாளில் கலர் உடையில்
கலகலப்பான மனதில்...
அதே நாளில் கணனியில் காணும் கண்களில்
காட்சிகளின் தண்டனையாக மாறிடும் நவரச மனமே..
போதுமே வாழ்க்கையில் தந்த மாற்றங்கள்...
மறு பிறப்பிலாவது நிழல் தரும் மரமாக மாற்றிவிடு என்னை.
(இப்படத்தில் மறைவாக காண்பிக்கப்படுவது பல மனிதர்களின் முகங்களேயாகும் )
---------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தானிமதி
www.nilafm.com