
நீலவானமாய் நானிருக்க..
அதில் சந்திரசூரியனாய் நீ...
முகிலாய் நானிருக்க..
தரைதொடும் மழையாய் நீ..
கரையாய் நானிருக்க..
கரைதொடும் அலையாய் நீ..
மரமாய் நானிருக்க..
மணம் பரப்பும் மலராக நீ..
கல்லாய் நானிருக்க..
சிலைவடிக்கும் சிற்பியாய் நீ..
விழியாய் நானிருக்க..
விழிமூடும் இமைமடலாக நீ..
எழுத்தாக நானிருக்க..
எழுதிவரும் சொல்லாக நீ..
இத்தனையும் இருந்தபின்பும்..
நமக்குள் மலர்செண்டு தந்து
வாழ்த்தவேணுமா..?
எமக்குள் பிரிவு வேண்டாம்..
இருவரும் நட்பால் என்றும் ஒருவரே .
2 கருத்துகள்:
உங்கள் அனைத்து கவிதைகளும் அருமை. உங்கள் பணி மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள்
செல்வகுமார்
வணக்கம்...வாருங்கள் செல்வகுமார்.
என் கூட்டிற்கு முதல் வாசகராய் வந்து வாழ்த்துக்கள் கூறிய தங்களுக்கு என் நன்றிகள்.
கருத்துரையிடுக